பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கேள்விகள் கேட்டேன். அவற்றிற் கெல்லாம் அவர் சரி யாகப் பதில் சொல்லவில்லை. அவருடைய இவ்வித மாறுத அக்குக் காரணமென்ன என்ற கேள்விக்கு மட்டும், தாம் நோய் வாய்ப்பட்டுத் தேறியதாகப் பதில் கூறினர். மற்றப் படி நான் கேட்பவற்றைக் காதில் வாங்கிக்கொள்ளாது: என் கவனத்தை வேறு விஷயத்தில் திருப்பப் பெரிதும் முயன்ருர், இதிலிருந்து என் மனதில் பெரிய பெரிய சங் தேகங்களெல்லாம் உண்டாய்க்கொண்டிருந்தன. சென்டி. ரல் ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றதுகூட எனக்குத் தெரிய சில்லை. என் தந்தை என் கையைப்பற்றி யழைத்த பிறகே: என் சிந்தனையை விட்டு அவர் பின் சென்றேன்.

எங்களுக்காக எங்கள் சொந்த மோட்டார் வந்து காத் திருக்குமென்று எதிர்பார்த்தேன். ஆனல் அதற்குப் பதி லாக, என் தந்தையார் சிறிது அாரத்திருந்த ஜட்கா வண்

'ಕಾಲ வாடகைக்கு அமர்த்திக்கொண்டு வந்தார். வண்டி, அருகில் வந்ததும், முதலில் என்னே அதில் ஏறச் செய்து பின் தானும் எறிக்கொண்டார். உடனே வண்டியோட்டி குதிரையைத் தெற்கு நோக்கிச் செலுத்தினன். எனக்குண் டான ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. ஒரு மோட்டார். கம்பெனியே சொந்தமாக இருந்தும், விட்டு உபயோகத் துக்கு மட்டும் ஒன்றுக்கு மூன்று மோட்டார். கார்கள். இருந்தும் ஒரு மோட்டார்கூட எங்களை ஏற்றிச் செல்ல வராமலிருந்ததென்ருல் அது எனக்குப் பேராச்சரியத்தை புண்டாக்காம விருக்கமுடியுமா? ஆல்ை, இம்முறை என் தந்தையைப் பார்த்து மோட்டார் என் வரவில்லை?" என்று கேட்கவில்லை. ஏனென்ருல் எனது கேள்விகள் அவரைப் பரம சங்கடத்துக்குள்ளாக்குவதையும், அவருள் பொதிக்,

$

தரும் கும் துக்கத்தைக் கிளறி. யதிகப்படுத்துவதையும்,