பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பிரிவும், குடும்பச் சீரழிவும் 219.

குறிப்பா லறிந்தேன். உற்சாகத்தோடன்றி, கவலையோ, டிருந்ததை இதற்கு முன் ஒரு முறையும் பார்த்தறியாத கான், இப்போது பார்த்தது முதல் பெருங் கவலையால் அவர் பேதுற்று வருந்துவதைக் கண்டு மனம் பதறினேன். இவ் வித அசெளகரியங்களெல்லாம் சேர்வதற்கு என்ன நிகழ்ந் திருக்கக்கூடும் என்று மிகத் தீவிரமாக ஊகித்துப் பார்த் தும் என்னல் கண்டறிய முடியவில்லை. ரயிலிலுஞ் சரி; ஜட்கா வண்டியிலுஞ் சரி; என் தங்தை லண்டனில் என் வாழ்க்கை எப்படி யிருந்தது என்ருே கேம்பிரிட்ஜ் கலா சாலைப் படிப்பு எப்படி என்ருே எனது யோக கூேடிமத் தைக் கேட்காதது எனக்கு மற்ருெரு புறத்தில் பெரிய ஆச் சரியத்தை விளேத்தது. . * ,

இவ்விதம் பல விஷயங்களைப்பற்றிச் சிந்தித்த வண் ணம் போய்க்கொண்டிருக்கையில் வண்டி திடீரென்று நின் றது. உடனே நான் தலை நிமிர்ந்து பார்த்தேன். அடை யாற்றிலுள்ள எங்கள் பங்களாவுக்கு எதிரில் வண்டி நிற் பதை யறிந்து திடுக்கிட்டேன். இவ்வளவு தாரமுமா கான் சிந்தனையில் மூழ்கி வந்தேன்? என் தேனும்பேட்டையி லுள்ள நமது மாளிகைக்குப் போகாது இங்கு தந்தை யழைத்து வந்தார்?' என்று என் மனதில் எழுந்த கேள்வி களுக்குப் பதிலே யாராய்ந்த வண்ணம் வண்டியைவிட்டு இறங்கினேன். என் தந்தையின் தோற்றமும், செயலும் எல்லாம் எனக்கு மிகவும் மர்மமாகவே இருந்தது.

வண்டியின் சத்தத்தைக் கேட்டுவிட்டுத்தான்போலும் உள்ளிருந்து வந்த என் அருமைத் தாய், நான் பங்களாவி லுள் அடியெடுத்து வைத்ததும், என்னேக் கண்டு ஓடி வந்து என்ன இறுகச் சேர்த்துக் கட்டிக்கொண்டு ஒ:வெனக் கதறி பழுதாள். நானுங் காரண மறியாமலே, அவளுடன்