பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பிரிவும் குடும்பச் சீரழிவும் 221

மூன்ரும் நாள் மாலே என் தாய் விஷயத்தை என் னிடம் மெல்லச் சொல்லத் தொடங்கிளுள். அம்மா புவன கமக்கு வந்த கஷ்ட காலத்தைப்போல இவ்வுலகில் வேறு யாருக்கும் வராதம்மா! நமது மோட்டார் வியா பாரம் கீ போன பிறகுகூட நன்ருய் நடந்து கொண்டுதா னிருந்தது. சனி திசையோ என்னமோ! உன் அப்பா பொறுப்பை யெல்லாம், தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு சும்மா கம்பெனிக்குப்போப் வந்துகொண்டிருந்தார். உன் சிற்றப்பன்சமாச்சாரத்தான் உனக்குக் தெரியுமே? தம் களியாட்டங்களுக்கெல்லாம் கம்பெனிப் பணத்தைத் தண் ணிர்போல வாரியிறைத்துச் செலவு செய்ய ஆரம்பித்துவிட் டார். இவர் தம் சிநேகிதர்களோடு கூடிக் கூத்தடிக்கும் சமாசாரம் பண நெருக்கடி யேற்பட்ட பிற்பாடு தான் உன் தந்தைக்குத் தெரியும். கொஞ்ச நாளைக்கெல்லாங் கம் பெனி நஷ்டத்தில் நடப்பது தெரிந்தது. வியாபாரம் மிக மோசமாய்விட்டது. கடன் ஏராளமாய்ச் சேர்ந்துவிட் டது. இச்சமயத்தில் போர்டு கம்பெனியின் (அமெரிக்க) சொந்தக்காரர்கள் நமக்கு மோட்டார் அலுப்புவதை கிறுத்தியதோடு, ஏஜன்ஸி கொடுத்திருந்ததையும் ாத்துச் செய்துவிட்டனர். தாங்களே சென்னையில் ஒரு கிளை ஆபீளைத் திறந்து வியாபாரஞ்செய்ய ஆரம்பித்துவிட்ட னர். எனவே, நமது கம்பெனி வியாபாரம் அடியோடு படுக்க விட்டது. கடைசியாக, மோட்டார் கம்பெனியை மூடவேண்டிய நிலை யேற்பட்டுவிட்டது. இதை யறிந்து கடன்காரர்கள் நெருங்கத் தலைப்பட்டனர். சம் சொத்துக்க ளெல்லாம் கடன்காரர்களுக்கு அடமானம் வைக்கப்பட் டிருப்பதால் அவைகளை விற்றுக் கடனைத் தீர்க்கவும் வழி யில்லை. அவ்வாறு செய்ய முயன்ருலும், கடன்காரர்கள் அதற்கிடங் கொடுக்காது அவற்றை எலத்தில் கொண்டு