பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பிரிவும், குடும்பச் சீரழிவும் 231.

வர்கள், உங்கள் அண்ணு காலஞ் சென்ற செய்தி தெரின் தும் ஒருவரும் இதுவரை வராமல் இருந்திருக்கிருர்களென்.

முல், அவர்களது அலட்சியத்தையும் நன்றி கெட்ட தன்மை யையும் என்னென்பது! இவர்களும் எனது தாய்விட்

டாரா? அப்பேர்ப்பட்ட கொடும்பாவிகள் விட்டுக்கா

நாங்கள் போவோம்?................ அதற்குமேல் வார்த்தை. யெழவில்லை. தொண்டை அடைத்துக்கொண்டது.

'உம். இல்ல அண்ணி சிதம்பரநாதனுக்கு நம் புவன வைக் கலியாணஞ் செய்து கொடுக்கவில்லை யென்ற கோபமாயிருக்கலாம். இருந்தாலும் இச்சமயத்தில் அவர் கள் இவ்வாறு அலட்சியமா யிருக்கப்படாதுதான்! என்ன. செய்வது? நமது தற்போதைய நிலமையை யுத்தேசித்து நாம் அதையெல்லாம் மனதில் வைத்துப் பாராட்டாமல். அவர்கள் வீட்டுக்குப் போவதுதான் நலமென்று எனக்குக் தோன்றுகிறது.................... ” என்று மெல்ல இழுத்தவண் ணங் கூறினர். -

இவ்வார்த்தைகள் எரியும் நெருப்பில் செய்விட்டது. போல் என் தாயின் கோபத்தை அதிகப்படுத்தியது. எனக் குத் தெரிந்து என் தாய் எதை முன்னிட்டும் இவ்வளவு தாரங் கோபங்கொண்டதை நான் பார்த்ததில்லை. தம்பி மீண்டும் அந்தப் பேச்சையே பேசுகிருயே! நாங்கள் நடுத் தெருவில் நின்று பட்டினி கிடந்து உயிர்விட்டாலும் விடு வோமே யொழிய, அந்தச் சண்டாளர்கள் வீட்டுக்குச் செல்வோமென்று மாத்திரம் கனவிலும் நினைக்காதே! வேண்டுமானல் நீ கூட எங்களைக் காப்பாற்ற வேண்டாம். எங்களைப்பற்றிய கவலே உனக்கு வேண்டாம். நாங்கள். எப்படியாகிலும் போகிருேம். உனது மனைவி மக்களைப், போய்ப் பார்”.......என்று கர்ஜித்தாள்.