பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 239.

டாக்டரை பழைத்து வரச்சென்ற என் சிற்றப்பா வெகு நேரமாயும் இன்னும் வரக்காணுேமே என்று எண்ணி வருந்திக்கொண்டிருக்கையில் யாரோ வருங் காலடிச் சப் தம் கேட்டது. ஆவ லோடு திரும்பிப் பார்த்தேன். எங்கள் தெருக்கடியான சமயத்தில் வசிக்க இடமளித்து உதவி வரும் ஜனுர்த்தன நாயுடுவின் மனைவி மக்கள் நாலைந்து பேர் விச னங் குடிகொண்ட முகத்தினராப் வந்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் எழுந்து 'அம்மா........... 'என்று கூறி எதிர்கொண்டோடுவதற்குள், அப்பெண்மணிகள் கன் றைக் கண்ட காய்ப் பசுவைப்போல் என்னிடம் தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு கோவெனக் கதறி யழுதனர்.

இக்கூக்குரலேக் கேட்டோ என்னவோ கமலம்மாள் முதலியவர்களும் அக்கம் பக்கத்திலுள்ள பெண்களும் வந்து கூடிவிட்டனர். பின்னர் ஜனுர்த்தன நாயுடு மகளிரில் இரு வர் கூடத்தின் நடுவில் ஒரு பாயை விரித்துப்போட்டு அதன் மீது என் தாயை எடுத்துக் கிடத்தினர். அப்புறம் எல்லோ ரும் என் காயைச் சுற்றி யுட்கார்த்து அழலாயினர். இச் செயலையும், அங்கு வந்தவர்கள் பேசிக்கொள்ளும் வார்த்தை களையுங் கேட்ட பிறகுதான், என் தாய் திடீரென எற்பட்ட மன அதிர்ச்சி தாங்கமாட்டாது இறந்துவிட் டாள் என நான் அறிந்தேன். இதை யறிந்ததும் நான், அம்மா என்னே விட்டா நீ போய்விட்டாப் ஐயகோ கடைசியாக என் கதி இப்படியா ஆகவேண்டும்! நமது சீருஞ் செல்வமும் போய்விட்டன. என்னே அருமையாக வளர்த்து, கல்வி புகட்டிய என் தந்தையும் போய்விட்டார்: அப்படியிருந்தும், என்னைப் பத்துமாதஞ் சுமந்து பெற்ற தாய்- எறும்பு நாடாவாறு இரவும் பகலும் கண் விழித்து காத்த அருமைக் காய்-பால் கினைந்தாட்டி வளர்த்த என் :