பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

ஆருயிர்த்தாய் இருக்கிருய் என மனந்தேறி யிருந்தேனே! நீ இருக்கும் வரை எனக்கு ஒரு குறையும் வராது என்று எண்ணியிருந்தேனே! என் எண்ணத்தில் மண்ணேப்போட்டு விட்டாயே! இனி யாரை நம்பி உயிர் வாழ்வேன்! இவ்வுல கத்தில் யார் எனக்கு கதி!-அந்தோ! கடைசியாக என் குலா அம்மா! நீ உயிர் துறந்தாய். கான உன் உயிர்க்கு எமனுக இருந்தேன்? ஆ! நான் என் செய்வேன் ஆ!!...” என்று கதறியவண்ணம் மூர்ச்சையாகி விழுந்தேன்.

嶽 * , 嶽 疊

என் நெற்றியில் சில்'லென்று ஏதோ பட்டதுபோன்ற உணர்ச்சி யேற்பட்டதனுல் கண் விழித்தேன். என் பக்கத் தில் ஜனுர்த்தன நாயுடுவின் கடைசி மகள் பத்மாவதி நின் றிருந்தாள். கண் திறந்து பார்த்ததைக் கண்ட அவள், "புவனம்மா! எப்படி யிருக்கிறது உடம்பு ஏதாவது கொடுக் கட்டுமா?’ என்று பரிவாகக் கேட்டாள். -

நான் தலையை ட்யசைத்துவிட்டு எழுந்திருக்க முயன் றேன். பத்மாவதி கையமர்த்தி, அம்மா! நீ எழுந்திருக்கக் கூடாது என்று டாக்டர் உத்தரவு உடம்பு அலண்டு விடு மாம், என்ன வேண்டுமோ கேட்டால் நான் கொண்டு வந்து தருகிறேன்” என்று மரியாதையாகக் கூறிய வண் ணம், படுக்கையில் நழுவி விழுந்த ஐஸ் கட்டி மூட்டையை எடுத்து மீண்டும் என் நெற்றியில் வைத்தாள். ~

நான் பக்மாவதியின் பேச்சைச் செவியேற்காமல், 'என் அம்மா எங்கே? என் அம்மா எங்கே?........ 'என்று கேட்டுக்கொண்டே எழுந்திருக்க முயன்றேன். இதே சம ல் தான் படுத்திருந்த அறைக்கு வெளியில் பெருத்த

யத்தில், அழுகை யொலியும், ஜனங்கள் கூச்சலும், சங்கு முதலிய