பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 241

வாத்தியங்களின் ஒசையும் எக்காலத்தில் என் காதில் விழவே நான் துள்ளி எழுந்து, என்னத் தடுத்த பத்மா வதியை ஒரு புறம் தள்ளிவிட்டுப் பைத்தியக்காரிபோல் ஒடினேன்! வெளியில் நான் கண்டதென்ன என் தாயின் பிரேதத்தை அப்போதுதான் பாடையில் கொண்டுபோய் வைத்துக் கொண்டிருந்தனர். என் சிற்றன்னேயும், மற்றும் உறவினர்களும் நண்பர்களும் பாடையைச்சுற்றி பழுது கொண்டிருந்தனர். நான், அம்மா! உன்னே எங்கே துக்கிக்கொண்டு போகிருர்கள்?-ஐயோ! என் அம்மாவை என்னிடமிருந்து எங்கே கொண்டுபோகிறீர்கள்? பாவி களே! உங்களுக்கு இரக்கமில்லையா?" என்று கேட்டுக் கொண்டே ஓடிச் சூழ்ந்திருந்தவர்களே யெல்லாம் நீக்கிக் கொண்டு பாடையில் வைத்த என் தாயின் பிரேதத்தின் மீது விழுந்து முகத்தோடு முகம் வைத்துச் சேர்த்துக் கட் டிக்கொண்டு அழுதேன். இதற்குள் நாலந்து பெண்கள் மிகவுஞ் சிரமத்தோடு என்னைப் பிடித்துத் தாக்கி விட்டி லுள்ளே பழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். -:

அதிகம் விவரிப்பானேன்! என் தாயின் பிரேதம் அடக் கஞ் செய்யப்பட்டாய்விட்டது. அக்கம் பக்கத்திலுள்ள வர்களும், உள்ளுர் உறவினர்களும் போய்விட்டனர். என் பாட்டி வீட்டா ரனவரும் வந்திருந்தமையால் ஜனுர்த்தனம் நாயுடு குடும்பத்தினரும் சென்றுவிட்டனர். ஒவ்வொரு வரும் எனக்கு ஆறுதல் தேறுதல் கூறிவிட்டே போயினர். ஆனல், ஜனுர்த்தனம் நாயுடுவின் மனைவியும் பெரிய பெண் அணும் என்னிடம் முன்போல் அவ்வளவு பற்றுத லில்லாத வர்களாய்க் காணப்பட்டனர். கமலம்மாள் அவர்களிடம் என் நிலையைச் சொல்லியிருக்கவேண்டும். அதைப்பற்றி கான் அவ்வளவாகக் கவலை கொள்ளவில்லை.