பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இவ்வுலகத்தைத் திரும்பிப் பாரேன்

இனி உம் இஷ்டம். ஆணுல் ஒன்று. எனது வாழ்க்கை வரலாற்றைக் கேட்பதற்கு உமது இருதயம் பலமுடைய தாக இருக்கவேண்டும். அதற்குத் தகுந்தவாறு உமது மனதையும் திடப்படுத்திக் கொள்வீராக’ என்ருள்.

நான் கிரித்துக்கொண்டே, அவ்வளவு கொடுமை நிறைந்ததா? உம்-அத்துனே கொடுமைகளையு மனுபவித்து விட்டு நீ இருக்கும்போது, நான் கேட்டுக் காங்கத்தான முடியாது? சி சொல்லப் போவதைப்போன்ற கொடுமை, களைக் கண்டுங் கேட்டும் அனுபவித்தும் நான் நன்கு பயிற்சி பெற்றுத் தேர்ந்திருக்கிறேன். ஆதலால், எங்கு உன் வர லாற்றைக் கேட்டுத் தாங்கமாட்டாது இருதயம் வெடித்து இறந்து விடுவேனே என்று பயப்பட வேண்டிய அவசிய மில்லே. இனி நீ தயங்காமல் உனது வாழ்க்கை வரலாற். றைக் கூறலாம்,' என்று சொன்னேன். .

மிேகவுஞ் சந்தோஷம்.--சரி; நான் இப்போது என் அறிவு தெரிந்த நாள் முதல் என் வாழ்க்கையில் எற்பட்ட சம்பவங்களே ஒன்றும் ஒளியாது கூறப்போகிறேன்; இதில் மின்கப்படுத்திக் கூறல் குறைத்துக் கூறல் ஒன்றுமில்லை. சிலர் தங்கள் வாழ்க்கை வரலாற்றைக் (Autobiography) கூறுகையில், தங்கள் கெளரவத்துக்குப் பாதகமான பாகங் களே-தீய ஒழுக்கங்களை-கெட்ட குணங்களே.மறைத்து, தங்கள் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டவர்களின் தீக்குணச் செயல்களையே அதிகப்படுத்திக் கூறி, அதன் வாயிலாகக் தாங்கள் பரிசுத்த மூர்த்திகள் என்று காட்டிக்கொள்ளபிறர் கினைக்கும்படிச் செய்ய-முயல்வார்கன். அது பெருக் தவறு. அவ்வாறு நான் கூறமாட்டேன் என்பதை நீக்கன் நினைவில் வைக்கவேண்டும். அவ்விதம் பொப் வரலாறு கூறுவது உலக மக்களுக்கு ஒரு கல்ல படிப்பினையைப் போதிப்பதாகாது என்பதை நான் நன்கு அறிவேன்"என்று