பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248. இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கப்படும்? ஜான் கில்பர்ட்டுக்கும் எனக்கும் உள்ள் தொட்ர்பு சரியானதுதான? என்பவைகளைப்பற்றி நான் சிங் தித்துப் பார்க்கவே இல்லை.

எனவே, நான் நேராக செந்தோமுக்குச் சென்று பலரை விசாரித்து ஜான் கில்பர்ட் இருப்பிடத்தை யடைங் தேன். மிஸ் கிரேஸும், கில்பர்ட்டும் என் விட்டுக்கு அடிக் கடி வந்திருக்கிருர்களே யொழிய, நான் அவர்கள் இருப் பிடத்துக்கு இதுவரை போனதில்லை. மிஸ் கிரேஸ் தன் மனதுக்கிசைந்த காதலனைத் தேர்ந்தெடுத்து விவாகஞ் செய்துகொண்டு அவளுேடு வாழ்கிருள் என்று ஜான் சொல்லி யிருந்தமையால், அவளே யெதிர் பர்த்து அங்கு செல்லவில்லை. நான் அவர்கள் வீட்டு வாயிலே யடைந்ததும் எதிர்ப்பட்ட ஆயா (பணிப்பெண்) வை நோக்கி ஜான் கில்பர்ட் இருக்கிரு ைஎன்று விசாரித்தேன். அவள் எனது அப்போதைய தோற்றத்தைக்கண்டோ என்னவோ முகத் தைச் சிடுகிடுத்து எதோ கூறி னன்னே அலட்சியப் படுத்தி விட்டுச் சென்ருள். - -

இதை உள்ளிருந்து தற்செயலாக கவனித்த துரைசானி (ஜான் கில்பர்ட்டின் தாயார்) உடனே வெளியே வந்து விநயமாகப் பேசித் தன் பணிப் பெண்ணின் அலட்சியத்துக் காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். பிறகு, நான் கில் பர்ட்டைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தபோது, அவர் வியப்பாக என்னை நோக்கிவிட்டு, உள்ளே அழைத்துக் கொண்டுபோய் ஒர் அறையில் நாற்காலியொன்றில் உட் காசவைத்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் ஜான் கில்பர்ட் வெளியேயிருந்து இயற்கையாகவுள்ள பெருமிதத்தோடு உள்ளே வந்தான். என்னைக் கண்டதும் திடுக்கிட்டான் என்பது அவனது மெய்ப்பாட்டிலிருந்து நான் அறிந்து கொண்டேன். - -