பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வில்லே. இல்லாவிடில், கடலிலோ, குளத்திலோ விழுந்தாயி அம் மற்றெதன் மூலமாக வாயினும் உயிரை இழந்திருப் பேன். ஒரு சிறு உயிரையும் என்னல் உற்பத்தி செய்ய முடியாதபோது ஒரு உயிரை அழிக்க மட்டும் எனக்கு என்ன உரிமையிருக்கிறது? இவ்வுடல், உயிர், உலகம் எல் லாம் ஆண்டவனது உடைமை. அவ்வுடைமையைச் சொங் தக்காரணுகிய அவனே எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது தான் எனது விருப்பம். அவனது திருவுள்ளக் குறிப்பையே நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். மற்றப்படி இவ்வுலகில் நானிருந்து என்ன வாரிக்கொள்ளப்போகி றேன்.?” என்று நான் விரக்தியாகப் பேசினேன்.

இவ்வுலகின்மீது எனக்குள்ள வெறுப்புணர்ச்சியைக் கண்டு அந்தம்மாள் ஆச்சரியங்கொண்டார். எனவே, எனது விரக்திக்குக் காரண மென்னவென அறிய என் வர லாற்றை அந்தம்மாள் மெதுவாகக் கேட்டார். நான் ஆதி போடந்தமாக ஒன்றையும் விடாது கூறினேன், முடிவில் அந்தம்மாள் என்மீக பச்சாதாபங்கொண்டு, புவன இவ் வளவு இளம் பருவந்திலேயே உன் வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் எற்பட்டது பரிதபிக்கத்தக்கது. மக்கள் வாழ்வில் இதெல்லாம். இயற்கைதான். எனினும், உன் விஷ் யம் சகிக்கக்கூடிய அளவுக்கு மேல் போய்விட்டது. போனது போகட்டும். இனி, நீ அநாதைப் பெண் என்ற எண்ணத்தை விட்டு விடு. இன்றிருந்து நீ எனது மகள். நான் பிராமண குலத்தில் 'பிறந்தும் நர்ஸ் தொழிலை மேற் கொண்டதால், கன்னியாகவே காலத்தைக் கழித்து வந் திருக்கிறேன். பிள்ளைப்பேறு பார்ப்பதில் எனக்கு நல்ல பெயருண்டு. இதல்ை பெருஞ் செல்வஞ் சேர்ந்திருக்கிறது. ராஜம்டிாள் என்ருல், இவ்வூரில் எல்லாருக்குக் தெரியும். நீ என் ஆதரவிலேயே கவலையின்றி இருந்து வரலாம்; வேற்.