பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 261

யாராகிலும் ஆடவர்கள் வந்து பேசிக்கொண் டிருக்கும் போது, அந்தம்மாள் காரிய மீெதுவு மின்றியே என்னைக் கூப்பிடுவதும் எனக்கு விரும்பமில்லையெனத் தெரிந்தும் அவர்களுக்கு என்ன அறிமுகஞ்செய்து பேச வைப்பதும் அவர்களைப் பற்றி என்னிடம் பிரமாதமாய்க் கூறுவதுமா யிருந்தார். அவ்வாடவர்களில் சிலர் என்னேக் காமக் குறிப் போடு நோக்கிச் சம்பந்தமில்லாத வார்த்தை யெல்லாம் பேசலாயினர். நான் அவ்விடத்தைவிட்டு அகன்றதும், அந்தம்மாள் அவ்வாடவர்களோடு இரகசியம் பேசலானுர். இந்தம்மாளது அந்தரங்க நோக்கம் ஒரு நாள் எனக்குக் தெரிந்துவிட்டது. என் அழகைக் கண்டு ஆடவர் பலர் மோகங்கொண்டலைவதாகவும், அவர்களில் பணக்காரரா யுள்ளோர் எனக்காக எவ்வளவு பணம் வேண்டுமானுலுங் கொடுப்பார்க ளென்றும், ஆகவே, என்ன விபசாரத் தொழிலுக்குப் பக்குவமாகப் பழக்கிப் பொருள் வரு வாய்க்கு இடம்தேட இதுதான் நல்ல சந்தர்ப்பமென்றும் அந்தம்மாள் வேலைக்காரக் கிழவரிடஞ் சொல்லிச் சதியா லோசனை செய்துகொண்டிருந்ததை மறைவிலிருந்து அறிந்த தும் நான் திடுக்கிட்டேன். எனக்கு உபகாரஞ் செய்த அம்மாளே அபகாரஞ் செய்யவும் கருதிவிட்டால், வேறு நான் என்ன செய்வது? எனவே, இனி இங்கு இருந்தால் மோசந்தான் என எண்ணிக் கைக் குழந்தையோடு யாரு

மறியாமல் வெளிப்பட்டேன்.

புகலிட மறியாது பல நாள் கரைச் சுற்றிப் பல இடங்களிலும் அலேந்தேன். நான் அணிந்திருந்த சாதாரண சிறு சிறு நகைகளை விற்று அப் பணத்தைக்கொண்டு சில நாட்கள் பசிப்பிணியைப் போக்கி வந்தேன். கடைசியாக என் நிலையைக் கண்டு மனமிரங்கிய கனவான் ஒருவர் சிபார்சு செய்து திருவொற்றியூரிலுள்ள பெண்பாடசாலை