பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

யொன்றில் என்னே உபாத்தியாயினியாக்கி வைத்தார் அதில் வரும் வருவாயைக் கொண்டு ஒரு சிறு விட்டில் குடியிருந்து என் வாழ்க்கையை நடத்தி வந்தேன். எங்கு போனலும் - பள்ளிக்கூடத்துக்குக்கூட குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரிந்தேன். இதைக் கண்டு என் சகா உபாத்தியாயினிகள் கேவிகூடச் செய்வதுண்டு. இதை யெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை.

இங்ஙனமிருக்க, ஒரு நாள் எங்கள் பள்ளிக்கூடத்தை கல்வியதிகாரி யொருவர் பார்வையிட வந்தார். பரீrை, முடிந்ததும் அன்று மாலே நான் வீட்டுக்குப் போன சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு ஆள் வந்து என்னேக் கல்வியதி காரி உடனே பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தான். நான் அவனுடன் சென்றேன். அதிகாரி தங்கியிருந்த விட்டை யடைந்ததும் அந்த ஆள் நானெடுத்துச் சென்ற குழந்தை யைத் தான் வைத்திருப்பதாக வாங்கிக்கொண்டான். நான் உள்ளே சென்றதும், அவ்வதிகாரி எனக்கு இல்லாத உப சாரமெல்லாஞ் செய்து பின்னர் ஏதேதோ தாறுமாருகப் பிதற்றினர். அவர் என்னழகில் மயங்கிவிட்டதாகவும், அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்தால், உடனே என்னேத் தலைமை உபாத்தியாயினி யாக்கிச் சம்பளத்தை உயர்த்தி விடுவதாகவும், இணங்காவிடில் என்மீது கு |ற்றஞ் சாட்டி உடனே வேலையிலிருந்து நீக்கிவிட முடியுமென்றும் நயமா கப் பயமுறுத்தித் தம் தீய வெண்ணத்தை வெளியிட்டார். எனக்கு ஆத்திரம் பொங்கியது. எனினும், அதை யடக் கிக்கொண்டு, அவர் விருப்பப்படி நடக்கத் தடையில்லை யென்றும், அன்று ஒரு அவசரவேலை யிருக்கிறதென்றும் சாக்கு போக்கு கூறி அக்காமப் பித்தனிடமிருந்து தப்பி வெளிவந்தேன். -.