பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வென்று யேர்சித்துக்கொண்டே நான் செல்லலானேன். சமூகக் கொடுமையை கினேந்து நினைந்து மனம் புண்ணுகி வெறுப்புணர்ச்சி மிகுந்து காட்டில் சிலகாலம் அவள் மிரு கங்களிடையே வசித்து வந்தமையால், முதலில் என்னைக் கண்டவுடனே அவ்விரக்தி மனுே பாவத்தோடே கடுமை யாக என்னிடம் நடந்துகொண்டாள் என்றும், சில மணி நேரங்கள் என்ளுேடு பேசி என் மனப்போக்கை பறிந்து பழகியகளுல் பழைய மனித சுபாவம் வந்து மரியாதை, தயாள குணம் மேலெழுந்து வேலை செய்கிறது என்றும் அத்து மகிழ்க்கேன். - -

அம்மங்கை குடிசையருகு சென்றதும், நான் பின்னே வருகிறேன என்று திரும்பிப் பார்த்துவிட்டு, அக்குடிசை யின் கதவைத் திறந்து உள் நுழைந்தாள். அங்கு ஒரு பக் கத்தில் மாட்டப்பட்டிருந்த காழை மடலால் அழகாகப் பின்னப்பட்ட சிறிய பாயைக் கீழேபோட்டு, அதில் அபi ரும்படி என்னேக் கூப்பிட்டாள். நான் வாப் பேசாது இயந்திரம்போல் அவள் சொல்லிய வண்ணமெல்லாம் இயங்கலானேன். கான் உள்ளே சென்று அத்தாழம் பாயின்மீது உட்கார்த்ததும் அகன் உள்ளமைப்பைக் கவன மாகப் பார்த்தேன். அவ்விடம் மிகவும் பரிசுத்தமாக இருந் தது. மரத்தாலாகிய பாத்திரங்கள் நாலந்தும், பிரம்பினுல் பின்னப்பட்ட கட்டு முதலிய சாமான்கள் சிலவும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. சாதாரண மரக்கட்டி லொன்று ஒரு மூலையில் கிடக்கது. . பூக்குடலேகள் இரண்டு மூன்று மேலே தொங்கவிடப்பட்டிருந்தன. இரு மரக் கூஜாக்கள் ஒருபுறம் வைக்கப்பட்டிருந்தன.ஆளுல் இம்மரச் சாமான் கள் எல்லாம் தச்சர்கள் செய்வதுபோல் திருத்தமாக இல்லை. எனினும், அவை பொதுவாக, உபயோகத்துக்கு ஏற்றவை யாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தன. இவ்வாறு