பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவன சுந்தனியின் இளம் பருவம் 29

வளர்த்தேன். மற்றும் ஒன்றரை வருஷத்திற்குப் பின்னர், என் தங்கை பெண் மகவொன்றைப் பெற்ருள். அக் குழந் தையும் அருமையாக வளர்க்கப்பட்டது. என் பிள்ளைக்கலி இக்குழங்தைகளால் ஒருவாறு தீர்ந்ததென்றே மகிழ்க்து நான் அவைகளைக் கண்ணுங் கருத்துமாக வளர்த்து வங் தேன். என் தங்கையோ உன் சிறிய தந்தையைப்போலவே சிறிது உல்லாசப் போக்குடையவ ளாதலால், இவைகளே அவ்வளவாகக் கவனிப்பதில்லை. குழந்தைகளைக் கண்காணிப் பதற்கு வேலைக்காரியும், அருமையாக வளர்ப்பதற்கு யானும் இருக்கிறேனென்ற எண்ணம் அவளுக்கு இருந்தது . போலும் ஆணுல் இரு குழந்தைகளுக்குத் தாயான பிறகு என் தங்கையிடம் ஒரு பெரு மாறுதல் ஏற்பட்டது. அவள் முன்போல் என்னிடம் அடக்க வொடுக்கமாக நடந்து கொள்வதில்லை. அதற்கு முன் எதையாகிலும் செய்வ தென்ருல் என்னைக் கேட்டே செய்வாள். இப்போதோ எதற்கும் என்னே எதிர்பார்ப்பதில்லை. எதையேனும் கேட்பதென்ருலும் என்ன அவள் அதிகாரத் தோரணையி லேயே கேட்க ஆரம்பித்தாள். தனக்குக் குழந்தைக ளிருப் பதால் இக் குடும்பத்தில் இப்போது செல்வாக்கிருக்கிறது என்று அவள் எண்ணிக்கொண்டாள் என்று கினைக்கிறேன். ஆனல் நான் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. தன் சொந்த தமக்கை என்ற உரிமையில் நடந்துகொள்ளுகிருள் என்றே அச்சமயம் எண்ணினேன்.

- இச்சமயத்தில் தெய்வச் செயலாக நான் எதிர்பாராத அளவில் கர்ப்பமுற்றேன். இச் செய்தி உன் தந்தைக்குப் பெரு மகிழ்ச்சி தந்ததென்றே சொல்லவேண்டும். இது வரை தன் வியாபார விஷயத்திலேயே அல்லும் பகலும் கிங்தையைச் செலுத்திக் குடும்பத்தைப்பற்றி யொன்றுங்