பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்


ஒரு சிறு கட்டிலில் கிடத்திவிட்டு, உங்கள் மூர்ச்சையைத் தெளிவிக்க லேடி டாக்டரும், நாங்களும் முயன்று கொண்டிருந்தோம். அச்சமயம் பக்கத்தில் ஏதோ சிற்றரவம் உண்டானதைக் கேட்டுத் தற்செயலாகத் திரும்பிப் பார்க்கையில், உங்கள் தங்கை குழந்தையின் கழுத்தை நெரிக்கக் கைகளைக் கொண்டு செல்வதைக் கண்டு நாங்கள் பதறிப் போய் ஒடினோம். எங்கள் வருகையை யறிந்து அந்தம்மாள் அப்படியே திகைத்து நின்றுவிட்டார்கள். அவர்கள் தோற்றம் பைத்தியம் பிடித்தவர்கள் அல்லது பைசாசம் பிடித்தவர்கள் தோற்றத்தைப்போல மிகவும் பயங்