பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவன சுந்தரியின் இளம் பருவம் . 35.

பார்த்துக்கொண்டிருந்தேன். அப்புறம் அவர்கள் அங்கு நிற்கவில்லே-உங்கள் குடும்பக் கோளாறு என்னவோ எனக்குத் தெரியாது. இவ்விதம் சம்பவம் கிகழ்ந்திருக்கிறது. ஆதலால் நீங்கள் குழந்தை விஷயத்தில் மிகவும் ஜாக்கிச தையா யிருக்கவேண்டும். டாக்டர் அம்மாள் இவ்விஷயத் தைச் சமயம் பார்த்து உங்களிடம் சொல்லி எச்சரிக்கை செய்யச் சொன்னர்கள்' என்று சொன்னுள். இதைக் கேட்டு என் மனம் எப்படியிருக்கும் என்று கினேக்கிருப் கண்ணு! அதை இப்போது கினேத்தாலும் என் உடல் முழு தும் நடுங்குகிறது. என் கங்கை என்ன நோக்கத்தோடு இவ் வாறு செய்ய எத்தனித்தாள் என்று அன்றிருந்து ஆராய லானேன். நீ பிறந்த பின்னர், அவள் சடத்துகொண்ட விதத்திலிருந்து, அவளது உள் நோக்கத்தை ஒருவாறு கிர கித்துக் கொண்டேன். அதாவது, நான் நீண்டநாள் பிள்ளே யில்லா திருந்தமையாலும், அவள் வெகு விரைவிலேயே குழந்தைகளைப் பெற்றமையாலும், உன் தந்தை மிகவும் முயன்று சம்பாதிக்கும் சொத்தெல்லாம் தன் பிள்ளைகளையே சேரும் என்றும் தாங்கள் ஏகபோகமாக எல்லாவற்றையும் அனுபவிக்கலாமென்றும் அவள் எண்ணி யிருந்தாள். அவ ளது எண்ணத்தில் இடி விழுந்ததுபோல் நான் கர்ப்ப மாகவே, அவள் மனம் வேதனையை படைக்கது. அவள் என்மீது மிகவும் பொருமைகொண்டாள். அவள் மனத்தில் பொருமை கொழுந்துவிட்டு எரிந்தமையாலேயே, அன்று அவளேயும் மறந்து இவ்வளவு துணிவாக உன்னைக் கொல்ல முயன்றிருக்கிருள். ஏனென்ருல், எனக்குப் பிறக்கும் குழக் கைக்குத்தானே நம் சொத்தை யனுபவித்ததற்குரிய சகல உரிமையும் அதிகாரமும் ஏற்படும். ஆதலால், சக்தடி செப் யாது அதைக் கொலேத்துவிட்டால், தன்னுடைய மக்கள் இடையூறின்றி யாவற்றையும் அனுபவிக்கலா மென்பது