பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவன சுந்தரியின் இளம் பருவம் 39

என்-முன் அறிகுறியாக-இருந்தது என்பதைக் குறிப் பிக்கவே யாகும். -

இவ்விஷய மெல்லாம் ஒன்று மறியாத என் தங் தையோ, நெடுநாளாகப் பிள்ளை யில்லாது வருந்திய தம் பிள்ளைக் கலி தீர்ந்தது என்ற மகிழ்ச்சிப் பெருக்கில், என் பொருட்டாகக் தாம் பல வருடங்களாக மிகவுஞ் சிரமப் பட்டுச் சம்பாதித்து வைத்த பணத்தைத் தண்ணீர்போல் வாரி யிறைத்தாராம். யான் பிறந்த தினத்தைக் கொண் டாடியதற்கும் பத்தாம் நாள் புண்ணியாவசனச் சடங்கு செய்து நாமகரணஞ் சூட்டியதற்கும் மட்டும் ஆயிரம் ரூபாய்க்குமேல் செலவு செய்தாரென்ருல், அவர் எனது ஜனனத்தை எவ்வாறு எண்ணினர் என்று விவரித்துக் கூறுவானேன்! அவ் வைபவத்தில் கலந்து இன்ப மனு பவித்த எங்களது சுற்றமும் ஏழை மக்களும் இன்னமும் அதைப்பற்றிப் பாராட்டிப் பேசுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அச் சமயத்தில், வேதாகம பண்டிதர் களான பிரதம்மணர்கள் ஜாதக கணிதத்தை ஆராய்ந்தும், உருவும் திருவுருவம் நோக்கியும் எனக்குப் புவன சுந்தரி" என்று பெயரிட்டனராம். என்னை ஊக்கமாகக் கவனித்து வருவதற்கென்றே என் தங்தை வெள்ளைக்காரத் தாதி யொருத்தியை ஏற்படுத்தி யிருந்தார். எனவே, நான் 'அத்தை மடிமேலும் அம்மான்மார் தோள்மேலும் வளர்வ தற்குப் பதிலாக, பெற்றேர் என்னைச் சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சிக் குலாவும் கோம் தவிர. மற்ற வேளை முழுதும் அத்தாதி தோளின்மீதும் மார்பின் மீதுமே வளர்ந்து வந்தேன். இதனிடையே என்னிடம் என் சிற் றன்னேயின் பிள்ளைகள் கொஞ்சி விளையாட வருவதும் யாலும் மற்றவர்களைப் பார்த்துத் தாவிச் செல்ல விரும்பு