பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv

லியோ டால்ஸ்டாய், அலெக்ஸாண்டர் டூமாஸ், சார்லஸ் டிக்கின்ஸ் போன்ற பேராசிரியர்களது சிறந்த கதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துத் தரலாம். ஆனaல், அப்பேரறிஞர்கள் என்ன நோக்கோடு, எந்த தத்துவத்தைப் புகுத்திக் கதைகளை எழுதி இருக்கிறார்களென, அவர்களது உட்கிடக்கையை முதலில் நன்கு தெரிந்து கொண்டு, கதைக்கு ஜீவனாக உள்ள சிறந்த கருத்துகள் போகாதபடி தமிழில் மொழி பெயர்க்க வேண்டுவது இன்றியமையாததாகும். இம்முறையைச் சரியாகக் கவனியாது வெறும் வார்த்தையைப் பிடித்துக் கொண்டு வார்த்தைக்கு வார்த்தை கண்டு பிடித்துப் போட்டு எழுதுவது ஜீவனில்லாத சடத்தையலங்கரிப்பது போலாகும்.

தமிழில் புதுக்கதை எழுத முற்படுவோர், ‘கதை என்றால் என்ன? அதன் தத்துவம் என்ன?’ என்பதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். கதை கற்பனை, உண்மை என இருவகைப் பட்டதாயினும், உண்மையை ஜீவனாகக் கொண்டு, எழுதப்படுவதே சிறந்ததாகும். மனித வாழ்க்கையின் படலத்தைப் படம் பிடித்துக் காண்பிப்பதே கதையாகும். மக்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, அவசியமான இடத்தில் கற்பனையைக் கலந்து எழுதுங் கதை, மொழி. வளர்ச்சிக்கும், படிக்கும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் துணை. செய்வதாகும். கதை எழுதுவோர்க்குக் கூடுமானவரை மானத தத்துவமும் (Psychology) தெரிந்திருக்க வேண்