பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றன்னையின் சதிச்செயல் 59

டாடி-நட்பு கொண்டாடி வந்தவர்கள் கூட்டம் இச்சங்க வாயிலாகவும் அதிகப்படலாயிற்று. சாதாரண காலங்களில் கூட எங்கள் மாளிகை கலியான வீடுபோல ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கிறைந்திருக்கும். அவர் களில் பலர் நெருங்கிப் பழகியமையால் குடும்பத் தோழர் களாகவும் இருந்தனர். எனவே, எங்கள் குடும்பத்தில் அநேகமாக அயலார் உறவினர் என்ற பேதமோ, ஆண் பெண் பேதமோ இல்லாமலிருந்தது. இன்னும் வெளிப் படையாகச் சொல்லவேண்டு மென்முல், அன்னிய ஆடவர் எதிரில் குடும்பப் பெண்கள் வரக்கூடாதென்ற கோஷா முறை அறவே கைவிடப்பட்டது. என் தாய் சங்க விஷ் பத்தில் அசிரத்தை காட்டியதுபோலவே, சிநேகிதரிடம் பழ கும் முறையிலும் சிறிது அமர்த்தலாகவே இருந்து வந்தாள். சாதாரணமாகத் தன்னுெத்த மகளிரோடு அவசியம் நேர்ந் தால் அளவளாவிப் பேசி மகிழ்வாள். மற்றப்படி ஆண் மக்களிடம் அவர்கள் எவ்வளவு அத்தியந்த கண்பர்களாயி லும் வயதில் பெரியவர்களிடத்தில்கூட தவிர்க்க முடியாக கிலேயில் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசிவிட்டுப் போய்விடுவாள். அதனுல் மற்றவர்கள் என் தாயைப் பணச் செருக்கு படைத்தவள் என்று பழித்துப் பேசுவதுண்டு.

என் சிறிய தாயோ எல்லோருடனும் கூச்சமின்றித் தாராளமாகப் பேசிப் பழகுவாள். அதோடு தன்னே எல் லோருக்கும் தெரியப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமும், எல்லாருக்கும் தகுந்தவிதமாக கடந்து நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற கருத்தும், தன். ஆடம்பரச் செயலேக் காட்டிக்கொள்ள, வேண்டுமென்ற விருப்பமும் அவள் மனதில் வேரூன்றி யிருந்தன. அவள் எதிர்பார்த்த படியே மற்றவர்கள் அவளைக் கருதித் தெய்வம்ாகப் போற்