பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

'அதற்கென்ன ஆள் முனிஸ்வரன் போலக் குறுக்கி லும் நெடுக்கிலும் பருத்தும் நீண்டும் இருக்கவே, இன்ஸ் பெக்டராகப் போட்டுவிட்டார்கள். இது ஒரு பெருமையா? காரியத்தில் திறமையில்லையென்ருல் என்ன பிரயோஜனம்'

"ஐயோ!-இப்போது என்ன செய்யச் சொல்லு கிருப்; அதைக் கூறித் தொலையேன் ஜகதா! நீ சொல்லுகிற படி இம்முறை நிறைவேற்றி வைக்கிறேனு இல்லையா, பார்! இக்காரியத்துக்கு முட்டுக்கட்டையாக உலகமே திரண்டு வந்து குறுக்கிட்டாலுஞ் சரிதான். ஒரு கை பார்த்து விடு கிறேன்........ அம்மம்மா, பெரிய பெரிய கமிஷனர் துரை, அஸிஸ்டெண்டு கமிஷனர்களிடத்தெல்லாம் மிகவுஞ் சுலப மாகச் சர்ட்டிபிகேட் வாங்கிக்கொண்டு 20 வருடங்களா கக் கியாதிபெற்று வந்திருக்கிறேன். முடிசூடாத இந்த ராஜாத்தியிடத்தில் மாத்திரம் சர்ட்டிபிகேட் வாங்க முடிய வில்லையே! நானும் ஐந்தாறு வருட காலமாகத் தலைகீழாக கின்று கெஞ்சிப் பார்க்கிறேன். என் பாச்சா உன்னிடம் கொஞ்சங்கூடப் பலிக்கவில்லையே! இனிய வார்த்தைக்குக் கூடப் பஞ்சமாக வன்ருே இருக்கிறது!”

"ஆமாம்; கொஞ்சிக் குலாவுவதற்குத் தான் உம்மைத் தேடிச் சினேகஞ் செய்தது!-உம்-என் வீனக வார்க் தையை வளர்த்திக்கொண்டு போக வேண்டும்!-ஐயா! இன்ஸ்பெக்டர்வாள்! இப்போது உம்மிடம் வெளிப்படை யாகப் பேசுகிறேன். உம் அழகைக் கண்டு மயங்கியோ அல்லது. உம்மிடத்துள்ள பொருளுக்கு ஆசைப்பட்டோ நான் உம்மை நாடி நிற்பதாக நீர் எண்ணியிருக்க மாட்டீர் என்று நம்புகிறேன். அவ்வாறு தவருக ஒரு வேளை நீர் ருந்தாலும், பெரிதும் ஏமாற்ற மடைவீர்-பின் எதற்காக என்னிடங் தோழமைகொண்டாப் என்று நீர்