பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi

கத்தை மேற்கொண்டு நடப்பதினால் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிப்பதும், முடிவில் தன்னைக் காதலித்த காதலனால் ஏமாற்றப்பட்டுத் தாங்க முடியாக இன்னல்களை யெல்லாம் அனுபவித்து ஜன சமூகத்தை வெறுத்து நீங்குவதுமே இக்கதையின் உட்கிடக்கையாகும்.

ஸ்ரீராமன் இலங்கையைக் கடக்க அணை கட்டுகையில் ஒரு சிறு அணிலும் மணலில் புரண்டு தன் முதுகில் ஒட்டிய மணலை உதறித் தொண்டு செய்ததுபோல், தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்காக அறிஞர்கள் செய்துவரும் சிறந்த கொண்டைப் பின்பற்றி, யானும் என் சிற்றறிவின் துணைக் கொண்டு இயற்றிய இக் கதையைத் தமிழ்த் தாயின் திருவடிகளுக்கு அணியாக்குகிறேன். ஆகவே, எனது இச்சிறு முயற்சிக்குத் தமிழ் மக்கள் ஆதரவளித்து என்னை மேன்மேலும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும்படி ஊக்க வேண்டுகிறேன்.

ஆசிரியன்.