பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

சிறுத்தைப் புலியின் நீண்ட வாலேக் கையால் பற்றிக் கரகர வென மேலே சுழற்றி அக் கழுதைக் குறத்தி'மீது ஓங்கி அடித்தெறிந்தாள். . - - -

அதைச் சிறிதும் எதிர்பாராத அச்சிறுத்தைப்புலி செய லற்று ராட்டினம்போல் சுழன்று இரத்தத்தைக் கக்கிக் கொண்டு கழுதைக்குறத்திமேல் விழுந்தது. இதல்ை கழு தைக் குறத்தியும் வெகுண்டெழுந்து அயலார் யாரோவந்து விட்டார்களென்று உணர்ந்து புவனசுந்தளியைத் திரும்பிப் பார்த்து உறுமியவண்ணமே ஓட ஆரம்பித்தது. கீழே விழுந்த சிறுத்தைப்புவியும் சிறிது நேரத்திற்கெல்லாம் தன் இனச் சமாளித்துக்கொண்டு மேலும் அங்கு கின்ருல் தனக்கு என்ன நேருமோ என்று பயந்துகொண்டு கழுதைக்குறத்தி யைப் பின் தொடர்ந்து ஒட்டம் பிடித்தது. சிறுத்தைப்புலி யைப் பற்றத் தாவிய வேகத்தில், சாதாரணமாகக் கோதி முடிந்திருந்த அவளது கூந்தல் கற்றை அவிழ்ந்து அலங் கோலமாகக் காற்றில் பறந்தன. எனவே, அவள் அச் சிறுத்தைப்புலியின் வாலேப்பற்றி மேலே சுழற்றியபோது 'இவள் என்ன காளிதேவியோ!' என்றே கருதவேண்டி யிருந்தது. பண்டைக்காலத்து வீரப் பெண்மணிகள் பலர் பல அருஞ்செயல்களைச் செய்ததாக வரலாறுகளின் வாயி லாகப் படித்திருக்கிறேன். ஆனல் புவன சுந்தரியைப் போன்ற வீரமகளே-அஞ்சாநெஞ்சம் பன்டத்த அணங்கை ஆபத்தை ஆனந்தத்தோடு வரவேற்று எதிர்த்து கிற்கும் ஆற்றல் வாய்ந்த காரீமணியை-நான் இதுவரை பார்த்தது கிடையாது. அவளே வீரத்தின் உருவென்றே சொல்லுதல் வேண்டும். அம் மிருகங்கள் அவ் விடத்தைவிட்டு ஓடிய பி. நான் கன்முக மூச்சுவிடலானேன். எனது அச்ச லும்.அப்போதுதான் என்னைவிட்டு அகன்றன. கள். வெகுதாரம் ஒடிக் கண்ணுக்கு மறையும்