பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வாழ்ந்தேனோ, யாருக்காக இம்மனித உடம்பு எடுத்ததாகக் களித்திருந்தேனோ, யாருக்காக அல்லும் பகலும் உழைத்துப் பாடுபட்டுப் பணஞ் சேர்த்தேனோ, யாரை என் உயிரினுஞ் சிறந்த பொருளாக எண்ணிக் காதலித்தேனோ, யாரை எப்போதும் மகிழச் செய்ய—இன்பத்தில் ஆழ்ந்த—ஒவ்வொரு கணமும் பெரு முயற்சி செய்தேனோ அம்மங்கை அமிர்த வல்லி—பெயரைப் பார்! காராட்டை வெள்ளாடு என்றழைப்பதுபோல், ஆலால விஷத்தினுங் கொடியவளாகிய அவளுக்கு அமிர்தவல்லி என்ற அழகிய பெயரை யாரிட்டார்களோ? அவர்களைக் கண்டால் இப்போது என்ன செய்வேன் தெரியுமா! (பற்களை நறநறவெனக் கடித்துப் பிறகு)—என்னை மோசஞ் செய்து ஏமாற்றி—நம்பிக்கைத் துரோகஞ் செய்து வஞ்சித்து—வேறொருவனை—அவன் வைத்திருக்கும் பணத்தைப் பெரிதாகக் கருதி—விவாகஞ் செய்துகொண்ட பின்னர், எனக்கு இவ்வுலகமே இருண்டு போய் விட்டது. எனக்கு இதற்கு முன்பெல்லாம் இன்பமாயிருந்த இவ்வுலகம் இப்போது துன்பம் நிறைந்ததாய்க் காணப்படுகிறது! இனி இவ்வுலகில் இருக்க எனக்குச் சகிக்கவில்லை. இதில் இருப்பது அனல்மேல் இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. இவ்வுலகை ஏறிட்டுப் பார்க்கவும் என் கண் கூசுகின்றது. இனி, இங்குள்ள மனிதர் முகத்தைத் திரும்பிப் பார்ப்பதில்லை என்று என்னுள் சபதஞ் செய்துகொண்டேன். இதை உண்மையாக நிறைவேற்றுவதென்றால், இதற்குத் தற்கொலையே சிறந்த வழி. ஆயினும் அக்கொடிய முறையைக் கைக்கொள்ள என் மனந் துணியவில்லை. ஆதலால் நான் என் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டு இத்தனை நாட்களாகப் பட்டினி கிடந்தே அலைந்து வருவது போலவே, மேலும் மன உறுதியோடு உண்ணா விரதம்பூண்டு, அதன் வாயிலாக எளிதில் உயிர் விடுவதே