பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பத்மாஸ்னி-புவனவின் அதிர்ஷ்டம் யாருக்கு வரும்: எங்கு போனலும் நமக்கெல்லர்ம் அவள்தான் ராணியாக விளங்குகிருள். அவளால்தான் நமக்குக் கெளரவங் கிடைக் கிறது. -

இராஜாம்பாள்:-புவன ராஜ குடும்பத்தில் பிறக்க வேண்டியவள்.

பத்மாலனி:-இப்போதுதான் என்ன? எவனேனும் அரசகுமாரன் இவளைத் தேடிக் கலியாணஞ் செய்துகொள் கிருன். இவள் ராணியாகப் போய்விட்டால் நம்மையெல் லாம் ஏறிட்டுக்கூடப் பார்க்கமாட்டாள்.

ஸ்வர்ண குமாரி:-அதெல்லாம் இருக்கட்டுமடி, நிரம் இவ்வளவு பேரிருக்க நம்மையெல்லாம் விட்டு புவணுவைக் தங்கள் கருத்துக்கிசைந்த காதலியாகத் தேர்ந்தெடுத்தார் களே! அவ்வாலிபர்களின் நுண்ணறிவை என்னென்பது!

சுலோசனு:--இதிலென்ன ஆச்சரியம்! தேனுள்ள இடத்தில் வண்டுகள் பறந்துவந்து மொப்ப்பது இயற்கை தானே! -

எனது தோழிகளது பேச்சு, முடிவில் என் பக்கத்தில் திரும்பிப் பலமடைந்து, வருவதைக் கண்டு என்னுல் சகிக்க முடியவில்லை. எனவே நான் சிறிது பிணக்கத்தோடு, சt தான் போங்களடி உங்களுக்கு வேலே இல்லை; என்னப் புரளி பண்ண ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் குறும்பு எப்போதும் போவதே இல்லை-நான் போகிேறன்” என்று கூறிக்கொண்டே எழுந்து வேகமாகப் பிளாட்பாரத்தை கேரிக்கி நடந்தேன். இதற்குள் பொழுது சாய்ந்துவிட்ட கால், ன் தோழிகளும் என்னைத் தொடர்ந்து வந்து விட் மார்கள். ஆனல் எனக்கு அச்சமயம் என் தோழிகளின் சம்பாஷணைகளை அர்த்தஞ் செய்துகொள்ள முடியவில்லை.