பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்த மகளின் விபரீதப்போக்கு 85

இப்போது அதை நன்முக உணர்கிறேன். இச்சம்பாஷணை யைக் கேட்டதிலிருந்து தோழரே! நீங்களும் மாணவிகளின் விபரீத மனப்போக்கை நன்முக அறிந்து கொண்டிருப்பீர்க ளென்று நம்புகிறேன். இவ்விபரீத மனப்போக்கை ஒட் டியே இம்மகளிரது செயல்களும் வெகு விபரீதமாகக் காணப்பட்டது. மற்ற மாணவிகளைவிடக் கலாசாலை ஹாஸ் டல்களிலேயே தங்கி வாசிக்கும் பெண்களிடம் நவநாகரிகப் போக்கின் பயனுகவோ, சகவாச தோஷத்தாலோ விபரித உணர்ச்சியும், செயல்களும் சகஜமாக இருந்தன. ஆடவர். சேர்க்கையை அருவருக்கும் இவ் அல்விராணிகள் எத்தனை விதமான இயற்கைக்கு மாருண தீய செயல்களே மேற். கொண்டிருந்தவர்கள் தெரியுமா! சில சமயங்களில் தற்செய லாக நான் சில மகளிர் இப்பொருந்தாச் செயல்களில் ஈடு பட்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. அவ்வாபாசக் காட்சி களைக் கண்டு என் கண்கள் கூசியதைக் காட்டிலும், மனம் அதிகமாகக் கூசியது. அப்பா எவ்வளவு அருவருப்பான காரியம் அதை என்னென்று விவரிப்பது; அவற்றை நினைத் தாலே உள்ளம் கடுங்குகிறது. இயற்கைக்கு மாருன இக் - கெட்ட பழக்கம் படித்த பெண்களிடையே பரவி வரு மானுல் வெகு விரைவில் ஜனசமூகம் பெரிதும் பாதகமடை யும் என்பது திண்ணம். பின்னே என்னைப் பெரிய படு குழியில் தள்ளுவதற்காக வேண்டியே போலும்! இறை வன் என்னே இளமையில் இவ்விதக் கெட்ட பழக்கங்களி லெல்லாம் ஈடு படுத்தவில்லை என்று கினைக்கிறேன். இயற்கை நெறியில் ஏறுமாருகப்போய்க் கெட்டலேய வைத்தாலும், செயற்கைச் சேற்றில் வீழ்த்தாததற்காக அவ்வாண்டவனுக் குத் துதி கூறுகிறேன். - -