பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடவர் சிநேகமும் ஆபத்தும் 91

சோம்...' என்று கூறியவர் மேலே பேச்ம்ாட் டாது தன் இரு கைகளையும் ஒருவிதயாக நீட்டி வளைத்துக் கொண்டு என்னத் தாவிப் பிடிக்க வந்தார். இவரது இவ் விபரீத நடத்தையைக் கண்டதும் நான் உட்கார்ந்த இடத்தி

வணின்றும் ஒரு துள்ளுக் துள்ளி ஆ' என்று அலறினேன்.

நான் பயத்தால் வாய்விட்டு அலறிப் பின்னடைந்தும், அவ்வெறியன் (இத்தகையோரை எவ்வாறு ஆசிரியரென மரியாதையாக அழைப்பது? அதைப் பொருட் படுத்த வில்லை. அக்காதகன் என்னைச் சேர்த்துக் கட்டிப்பிடிக்கும் எண்ணத்தோடு கைகளே விகாரமாக நீட்டிக் கொண்டே மிகவும் நெருங்கிவிட்டான். இன்னும் ஒரு விநாடிக்குள் என்னைப் பற்றிவிடுவான். -

அவன் என்னிடம் நெருங்கி வர வர, நான் பின்னுக்கு நகர்ந்து நகர்ந்து போய்க்கொண்டே தலையை கிமிர்த்தி, வளைத்து வெளியே நீட்டினேன். எனக்கும் அவனுக்கு மிடையே ஒரு அங்குல இடங்கூட இல்லை. இன்னும் அவன் சிறிது நகர்ந்து வந்திருப்பானுல்ை, நான் தலை கீழா கக் குப்புற வெளியே கழுவி விழுந்திருக்க வேண்டியது தான். ஐயோ நான் என்ன செய்வேன்! இப்பாதகன் என்னைப் பற்ற வருகிருனே! எதற்காக என்மீது ஆவேச மாகத் தாவுகிருன்? நான் அணிந்திருக்கும் வைர சகைகளை யும், பொன் ஆபரணங்களையும் கவர்ந்துகொள்வதற்கா? அவைகளில் எவற்றை வேண்டுமாயினும் என்னைக் கேட் டால் கொடுத்திருப்பேனே கல்வி யறிவுடைய இம்மனி தன் என்னைத் துன்புறுத்திப் பெறவா முயலவேண்டும்? நான் அணிந்திருக்கும் கைகளை யெல்லாம் கழற்றிக் கொடுத்து விடுவதாகச் சொன்னல் என்னைத் துன்புறுத்தர் மல் விட்டு விடுகிறன என்று அவனைக் கேட்டுத் த்ான்