பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அழைத்து ‘உன் தாயாரை வீட்டிற்குள் அனுமதிப்பதோடு அவர் தரும் அன்பளிப்பையும் ஏற்று. உன் தாயாரைக் கண்ணியப்படுத்து’ எனப் பணித்தார். இம் மனிதநேய உணர்வே சமய நல்லிணக்கத்திற்கு உயிர்மூச்சாகும்.

அனைத்து வேறுபாடுகட்கும் அப்பாற்பட்ட நிலையில் மனித குலத்தை ஒரு குலமாகக் கண்ட அண்ணலெம் பெருமானார் அவர்கள், “படைக்கப்பட்டவை அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பத்தினரே” எனக் கூறியுள்ளார். அது மட்டுமல்ல,

“சீப்பின் பற்களைப்போல் மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே”

என்ற நபிமொழி மக்களினம் சமத்துவமாக, சகோதரத்துவமாக வாழ வேண்டியவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவனாக இருந்தாலும் முதலில் அவன் மனிதன்; அதன் பின்னரே அவன் சமயம், இனம், மொழி என்பன வரமுடியும். எனவேதான், ‘மனித நேயத்தின் உயிராக’ முஹம்மது நபியைக் கண்ட பிரிட்டானிய கலைக்களஞ்சியம், “அனைத்து மதத் தலைவர்களையும் வெற்றி கண்டவர் முஹம்மது நபி” எனப் புகழ் மாலை சூட்டி மகிழ்கிறது.

இன்றைய உலக ஒற்றுமைக்கு மனிதகுல ஒருமைப்பாட்டிற்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டி, மனித உள்ளங்களின் ஒருங்கிணைவை நிலை நிறுத்த பேருதவி புரியவல்ல சமய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாக அமைந்துள்ளது. இதற்கு உதவியாக முன்பு ‘பெருமானாரின் பிற் சமயக்