பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

கிருஸ்தவ இஸ்லாமிய இனமக்கள் அனைவருக்கும் உண்டு என்பது இச்சட்டத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

அனைத்துச் சமயத்தாருக்கும்
குடியுரிமை தரும் அதிகாரம்

வேற்று நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சகல உரிமைகளோடு கூடிய குடியுரிமை வழங்கும் அதிகாரம் அன்றும் சரி, இன்றும் சரி நாட்டின் மையமான அரசுக்கே சொந்தமான அதிகார உரிமையாகும். ஆனால், அண்ணலார் வழி காட்டுதலில் உருவாக்கப்பட்ட மதீனா நகர அரசமைப்புச் சட்டத்தில் மதீனாவுக்கு அப்பால் இருந்து எப்பகுதியைச் சேர்ந்தவர் வந்தாலும் அவரது இனச் சார்புடையவர்களோ அல்லது சமயச் சார்புடையவர்களோ அடைக்கலம் தந்து அவர்களை மதீனா நகரின் குடிமகன் எனும் உரிமையை அவர்களுக்கு வழங்கலாம். ஒரு யூத இனத்தையும் சமயத்தையும் சார்ந்த மதீனா நகர யூதர் ஒருவர் வேற்று நாட்டு யூதனுக்கு மதீனாவில் அடைகலம் தருவதன் மூலம் மதீனாவில் வாழும் குடியுரிமையை வழங்கலாம். இவ்வாறே ஒரு முஸ்லிமுக்கு ஒரு முஸ்லிமும் ஒரு கிருஸ்தவனுக்கு ஒரு கிருஸ்தவனும் அடைக்கலம் அளிப்பதன் மூலம் குடியுரிமை வழங்க இயலும் என்பது மதீனா நகர் சட்டவிதியாகும். இன்னும் சொல்லப்போனால் அடிமை நிலையிலிருந்து முஸ்லிமானவருக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்கியதென்றால் மதீனா நகர் ஆட்சி, அண்ணலார் தலைமையில் இயங்கி, சமயங்களுக் கிடையே எத்தகைய ஒருங்கிணைவை, சமத்துவத்தை, ஒற்றுமையை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளது என்பது வியப்பூட்டும் செய்தியாக உள்ளது. இப்பெருஞ் சிறப்புக்கு அடித்தளமாக அனைத்துச் சமயங்களும் இறைவனால் அளிக்கப்பட்டவைகளே என்ற திருக்குர்ஆன் கோட்பாடும் அதனைச் செயலளவில் நிலை நிறுத்திய