பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டமுமே காரணமாகும்.

இதில் மேலும் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு சிறப்பம்சம் குறிப்பிட்ட சமயத்தின் ஆதிக்கம் என்ற பேச்சுக்கு அறவே இடமில்லாமற் போய்விட்டதுதான். அத்துடன் தனிப்பட்ட மனிதருக்கோ அல்லது மக்கள் குழுமத்துக்கோ அல்லது குறிப்பிட்ட சமூகத்துக்கோ சிறிதளவுகூட ஆதிக்கமோ அல்லது பிறரைத் தன் நலங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் தன்னல வேட்கைக்கோ அறவே இடமில்லை. மனித இனத்துக்கு அமைதிச் சூழ்நிலை உருவாக இதனினும் சிறந்த வழி வேறேதேனும் உண்டோ? இதனை நூற்றாண்டுகளாகியும் கூட இன்னும் நாம் அந்த உயரிய நிலையைப் பெற முடியாது தட்டுத் தடுமாறிக் கொண்டுள்ளோம் என்பதுதான் உண்மை.

மேலும், மனித இனம் என்ற அளவில் அனைத்துச் சமயச் சார்புள்ளவர்களும் தத்தமது இன அல்லது சமயச் சார்பாளர்களை ஏற்றுப் புரக்கவும் அவர்கள் தாம் சார்ந்த சமய உணர்வோடு மற்ற சமயத்தவர்களோடு ஒருங்கிணைந்து அமைதியோடு வாழவும் வழிகாட்டியது மதீனா நகர அரசமைப்புச் சட்டம் என்று கூறலாம்.

சமயத் தேர்வுக்கு முழு உரிமை

மதீனா நகர அரசமைப்புச் சட்டத்தின்படி யாரும் எந்தச் சமயத்தையும் தங்கள் மனச் சாட்சிப்படி தேர்ந்தெடுத்து அதில் இணையலாம். அவ்வாறு இணைவதை எதிர்க்கவோ தடுக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. அதே சமயத்தில் யாரையும் எந்தச் சமயத்தில் சேர வற்புறத்தவோ, கட்டாயச் சூழ்நிலையை உருவாக்கி சமயச் சூழலுக்குள் வலிய இழுக்கவோ கூடாது. தாங்களாகவே முன்வந்து எந்தச் சமயத்தையும் ஏற்கலாம். அதன் அடிப்படையில் சடங்கு