பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

களுக்கு உங்கள் மார்க்கம் உங்களுக்கு” என்ற திருமறை வாக்கிற்கொப்ப சமய சகிப்புத் தன்மையோடு நடந்து மாற்றுச் சமயத்தவர்களை மதிப்பர்; மகிழ்வுறுத்துவர்.

அதே சமயம் அச்சமயங்களின் மூலக் கொள்கைக்கு மாறுபாடாகவும் வேறுபாடாகவும், தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப எதையாவது புகுத்தி, சமய ஒழுங்குக்கு, அறவழிப் போக்குக்கு ஊறுபாடாக அமையும் எதையும் நீக்கி, அச்சமயத்தின் மூலக் கொள்கையைக் காக்கவும் அதன்மூலம் சமூக நலத்தைப் பாதுகாக்கவும் முஸ்லிம்கள் தயங்கியதில்லை.

மத இடைச் செருகல் நீக்கிய கலீஃபா

பாரசீகத்தை கலீஃபா உமர் (ரலி) அவர்கள் வெற்றி கொண்டபோது அந்நாட்டில் ஒருவகை திருமண முறை இருந்தது. ஜொராஸ்டிர சமயத்தைச் சேர்ந்த ஒருவர் தன் நெருங்கிய உறவினரைத் திருமணம் செய்து கொள்ளலாம். அவர் தங்கையாகவோ தன் மகளாகவோ, தன் தாயாராகவோகூட இருக்கலாம். அறுவறுக்கத்தக்க இத்திருமண வழக்கம் சமய அடிப்படையில் புனிதமாகக் கூடக் கருதப்பட்டது. கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இத்திருமணப் பழக்கத்தை உடனடியாக ஒழிக்கும்படி கட்டளையிட்டார். காரணம் இத்திருமணமுறை ஜொராஸ்டிர சமயத்தின் மூலக்கொள்கை அல்ல; பாரசீக மன்னன் ஒருவன் தன் தங்கையை மணந்து கொள்ள விரும்பி, தன் விருப்பத்தை ஜொராஸ்டிர சமயக் கொள்கையாக ஆக்கி விட்டான். கலீஃபா உமர் (ரலி) அவர்களின் நடவடிக்கை மூலம் இடைக்காலத்தில் இடைச் செறுகலாக ஜொராஸ்டிர சமயத்தில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட கொள்கை நீக்கப்பட்டதன் மூலம் ஜொராஸ்டிர சமயம் தன் தனித்துவத்தைக் காத்துக் கொள்ள முடிந்தது. மற்றபடி