பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

முஸ்லிம் ஆட்சியினர் எக்காரணம் கொண்டும் பிற சமய அடித்தளக் கொள்கைகளை மாற்றவோ திருத்தவோ நீக்கவோ முயன்றார்களில்லை.

இஸ்லாத்தை முதன்முதல் ஆதரித்த கிருஸ்தவ மன்னர்

இறை அறிவிப்புக்குப்பின் இஸ்லாமிய நெறியைத் தன்னைச் சுற்றிலும் நெருக்கமாக இருந்தவர்களிடையே ரகசியமாக எடுத்துக்கூறி இஸ்லாமிய மார்க்கத்தின்பால் ஈர்த்து வந்ததை அறிந்த குறைஷிகள் அதை எதிர்க்கத் தலைப் பட்டனர். பெருமானாரின் நெருங்கிய உறவினரும் மாபெரும் வீரர்களான ஹம்ஸா (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் குறைஷிகளின் குரூர எதிர்ப்புணர்வு நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மீது மட்டுமல்லாமல் இஸ்லாத்தை ஏற்றவர்கள் மீதும் திரும்பியது. இதனால் எண்ணற்ற துன்பங்களை விளைவிக்கலாயினர், பொறுக்க முடியாத நிலையில் இஸ்லாமிய மார்க்க நெறியை ஏற்ற முஸ்லிம்கள் பக்கத்து நாடுகள் பலவற்றுக்கும் சென்றார்கள். இதன்மூலம் குறைஷிகளிடமிருந்து பாதுகாப்புத் தேடுவதோடு இறைநெறியாகிய இஸ்லாத்தை அப்பகுதி மக்களிடம் எடுத்துக்கூறி விளக்குவதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. இத்தகைய இஸ்லாமியப் பிரச்சாரம் மக்கள் முதல் மன்னர் வரை நடைபெற்றது.

மக்காவிலிருந்து அவ்வாறு பாதுகாப்புத் தேடி அபிசீனியா நாடு வந்த முஸ்லிம்கள் இஸ்லாம் பற்றிய செய்திகளை - இறைமொழிகளை ஈஸா (அலை) அவர்களைப் பற்றியும் மர்யம் பற்றியும் திருமறை கூறும் இறை மொழிகளைக் கேட்ட கிருஸ்தவரான அபிசீனிய அரசர் இஸ்லாத்தைப் பெரிதும் மதிக்கத் தலைப்பட்டதோடு முஸ்லிம்களை ஆதரித்துப் பாதுகாக்கலானார். இவ்வாறு