பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

மட்டுமே என்பது மாபெரும் வரலாற்று உண்மையாகும். இதற்குக் காரணம் என்ன?

‘யார்’ என்பதை விட ‘என்ன’ என்பதே
இந்திய பண்பாட்டின் தனித்தன்மை

இந்தியப் பண்பாட்டின் தனிப்பெரும் சிறப்பு அஃது ‘யார்’ என்று பார்ப்பதைவிட ‘என்ன’ என்பதில் மட்டுமே அதிகம் கருத்தூன்றுவதைத் தன் இயல்பாகக் கொண்டிருப்பதுதான். உலகத்துப் பண்பாடுகள் அனைத்துமே இங்கே வந்து சங்கமித்திருக்கின்றன. உலகிலுள்ள சமயங்கள், அவற்றின் தத்துவச் சிந்தனைகள், கொள்கை கோட்பாடுகள் அனைத்துமே இங்கே வந்து தடம் பதிக்கத் தவறவில்லை. அப்போதெல்லாம் அவற்றிலுள்ள நல்லன சிலவற்றை தன் போக்கில் உருமாற்றித் தனதாக்கிக் கொள்ள இந்தியக் கலாச்சாரம் தயங்கியதே இல்லை. இதன் மூலம் காலந்தோறும் மாறி வரும் புதிய போக்குகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் புதுப்பித்துக் கொண்டே வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதனால்தான் உலகத்துப் பண்பாட்டுச் சிறப்புக் கூறுகளின் சாயலை, உலகத்துச் சமயங்களின் அடிப்படைத் தனித்தன்கைகளை யெல்லாம் இந்தியத் தத்துவ, கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளில் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருவதைக் காணமுடிகிறது என வரலாற்று ஆய்வாளர்கள் பெருமையோடு குறிப்பிடுகிறார்கள்.

சகிப்புத்தன்மை எனும் தனிப் பெரும் தகைமை

இவ்வாறு காலந்தோறும் புதுப்புதுச் சிந்தனைகளைத் தன்னுட் கொண்டு புத்துயிர் பெற்றுவரும் பாரதப் பண்பாட்டின் அடித்தளப் பண்பாட்டு கூறாக அமைந்திருப்பது ‘சகிப்புத்தன்மை’ எனும் தனிப்பெரும் சக்திமிகு பண்பாடாகும். இந்தியப் பண்பாட்டின் வளர்ச்சி வரலாறு பல்வேறு

9