பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தத்துவ, கலை, பண்பாடுகளின் கலப்பு-இணைப்பு-பிணைப்பு என்பதாகவே உள்ளது. இதனாலேயே பிற நாடுகளின் பழம்பெரும் பண்பாடுகள் தத்துவச் சிந்தனைகள் எல்லாமே இறப்பைத் தன்னுட்கொண்டு மறைந்துவிட்ட போதிலும் இந்தியப் பண்பாடு, கலை, கலாச்சாரம், தத்துவச் சிந்தனைகள் கால வெள்ளத்தை எதிர்த்து இன்றும் ஆற்ற லோடு விளங்கி, உலகுமுன் உயிர்ப்புடன் இருந்து வருகின் றன என்றால் அதற்குரிய ஆணிவேறாக அமைந்திருப்பது ‘சகிப்புத் தன்மை’ எனும் தனிப்பெரும் பண்பாடாகும்.

ஹிந்து மதத்தை மேலை உலகுக்குணர்த்திய அல்புரூனி

அசோகர் தன் தூதர்கள்மூலம் கிழக்காசிய நாடுகளில் புத்த சமயத்தை மட்டும் பரப்பவில்லை; அத் தூதுவர்கள் மூலம் இந்தியத் தத்துவங்களும், கலாச்சார, பண்பாடுகளும் பரப்பப்பட்டன. ஆனால், மேலை நாடுகளில் இந்தியச் சமயங்களை தத்துவ சித்தாந்தங்களை, கலை, கலாச்சார, பண்பாட்டுச் சிறப்புகளை உலகறியச் செய்யும் மூலவராக ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு அமைந்திருந்தவர் அல்புரூனி எனும் முஸ்லிமாவார். “ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு உலகப் பேரறிஞர்களாக விளங்கியவர்கள் இருவர். அவர்கள் அல்புரூனியும் அவிசென்னாவும் ஆவர்” என யுனெஸ்கோ போற்றியுள்ளது. புகழ்பெற்ற வரலாற்று தத்துவ மேதையான அல்புரூனி ஒருமுறையல்ல, பலமுறை இந்தியா வந்து, வேதம் உட்பட இந்தியத் தத்துவச் சிந்தனைகளை மிக நன்றாக உணர்ந்து தெளிந்து, கலை, பண்பாட்டுத் தனித் தன்மைகளை நுணுகி ஆய்ந்து, அவற்றின் சிறப்புகளை யெல்லாம் அரபு மொழியில் பெருநூலாக எழுதினார். இவற்றை முஸ்லிம்கள் அறிந்ததோடு நில்லாது இந்நூல் லத்தீன், கிரேக்க மொழிகளில் பெயர்க்கப்பட்டது. பின்னாளில் இவை ஸ்பெயின் நாட்டில் டோலடோ நகரில்