பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

பாதுகாத்துக்கொள்ளவும் வளர்த்துக் கொள்ளவும் நாம் அனுமதியளிக்கிறோம். இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் நம் தேசிய வாழ்வில் முழுமையான சம பங்கினை வகிக்கக் கூடியவர்களாகத் திகழ்கின்றனர்.” என முத்தாய்ப்பாகக் கூறினார் முன்னாள் இந்தியப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்கள்.

ஒருங்கிணைந்த இந்தியாவை
உருவாக்கிய முஸ்லிம் மன்னர்கள்

இன்றைக்கு நாம் ஏக இந்தியாவைக் காண்கிறோம். இதற்கு அடித்தளம் அமைத்து ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கி நம்மையெல்லாம் ஒரே நாட்டவர் என்ற உயர் நிலைக்கு உயர்த்தியவர்கள் முஸ்லிம் மன்னர்களே ஆவார்கள்.

பல்வேறு மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளாகச் சிதருண்டு கிடந்த இந்தியாவை, எண்ணற்ற குறுநில மன்னர் ஆட்சிகளை அகற்றி, ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய பெருமை முஸ்லிம்களை, குறிப்பாக மாமன்னர் அவ்ரங்கஸீப் ஆலம்கீர் அவர்களையே சாரும். நாடு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனியே நிர்வாக அதிகாரிகள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். வரிமுறைகள் சீரமைக்கப்பட்டதால் அரசு வருமானத்துக்கு நிரந்தரவழி காணப்பட்டது. உலோக நாணயங்கள் அச்சிடப்பட்டன. மைய அரசு உருவாக்கப்பட்டு அனைத்து நிர்வாகப் பகுதிகளும் கண்காணிக்கப் பட்டன. இதன்மூலம் வரலாற்றில் முதன்முறையாக ‘இந்தியா ஒரே நாடு’ என்ற உணர்வு மக்களிடையே உருவாகி நிலை பெற்றது.

அவ்ரங்கஸீபும் வரலாற்று அவதூறும்

இச்சந்தர்ப்பத்தில் மாமன்னர் அவ்ரங்களிப் பற்றிய உண்மைகளை அறிவது அவசியம். இந்திய முஸ்லிம்