பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140


நான்கு ஹிந்து மத வேதங்களும் ரிஷிகளும்

ஹிந்து மதத்தின் பெரும் வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நான்கும் மற்ற வேதங்களும் ரிஷிகளாலோ மற்ற மனிதர்களாலோ இயற்றப்பட்டவைகள் அல்ல. அவைகளும் மற்ற சில வேதங்களும்கூட இறைவனால், இறைச் செய்திகளாக வழங்கப்பட்டவைகளே என்பதுதான் ஹிந்து மத ஆச்சாரியர்களின் கருத்து.

ஹிந்து மதத்தை நிறுவியவர் யார் என்பது இன்று வரை கண்டறியவியலா ஒரு புதிராகும். பிரம்ம சூத்திரம் செய்த வியாசரும் கீதை வழங்கிய கண்ணனும் தங்களுக்கும் முன்னதாக வேதங்கள் இருந்ததாகக் குறிப்பிடுவதிலிருந்து இவர்களுக்கும் முன்னரே வேதங்கள் வழக்கில் இருந்து வந்துள்ளன என்பது தெளிவாகிறது.

இவ்வேதங்கள் ரிஷிகளோடு நெருங்கிய தொடர்புடையவையாயினும் இவற்றை இயற்றியவர்கள் ரிஷிகள் அல்ல. இதை எண்பிக்கும் வகையில் காஞ்சிப் பெரியவர் ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் அவர்கள்,

“இந்த வேத மந்திரங்களைச் செய்த ரிஷிகளை இவற்றின் ஸ்தாபகர்கள் என்று சொல்லலாமா என்று பார்த்தால், அவர்களோ இந்த வேதங்களை தாங்கள் செய்ய (இயற்ற)வில்லை என்கிறார்கள். எங்கள் மூலம்தான் இந்த மந்திரங்கள் லோகத்துக்கு வந்தன என்பது வாஸ்தவம். அதனால் தான் எங்களை மந்திர ரிஷிகளாகச் சொல்லியிருக்கிறது. எங்கள் மூலம் வந்ததேயொழிய, நாங்களே அவற்றைச் சொல்ல (இயற்ற)வில்லை. நாங்கள் அப்படியே மன மடங்கித் தியான நிஷ்டையில் இருக்கிறபோது இந்த மந்திரங்கள் ஆகாயத்தில் எங்கள் முன்னே தெரிந்தன. நாங்கள் அவற்றைக் கண்டறிந்தவர்கள்தான் (மந்த்ர த்ரஷ்டா); செய்தவர்கள் (மந்த்ர கர்த்தா) அல்ல என்கிறார்கள்” என எடுத்துக் கூறுவதன்மூலம் இந்திய வேதங்கள் ஏக