பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

திலுள்ள காலடியில் பிறந்த சங்கரர் அங்கு வந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த முஸ்லிம்களின் உருவமற்ற ஒரே இறைவன் என்ற இறை வணக்கப் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, அத்வைத கொள்கையை ஹிந்து மதத்தில் நுழைத்தார் என்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

இதிலிருந்து ஏகத்துவக் கொள்கையான தவ்ஹீது ஆதி சங்கரரிடம் ஏற்படுத்திய தாக்கமே அத்வைதக் கொள்கையாக உருவெடுத்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்தியச் சமயங்களின் மறுமலர்ச்சிக்கு
உந்து சக்தியான இஸ்லாமிய நெறி

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவக் கொள்கையும் (ஓரிறைக் கோட்பாடு) இறை ஞானமும் (தஸவ்வுப்) ஹிந்து சமய ஆர்வலர்களிடையே ஒரு புதுவித உத்வேகத்தை ஊட்டி வளர்க்கலாயின. சர்வ வல்லமையுள்ள ஒரே இறைவனின், படைப்புகளே உலகிலுள்ள அனைத்தும். மனிதப் படைப்பில் எவ்வித வேற்றுமையும் இல்லை. இறை வேதம் எல்லோருக்கும் பொது. நற்பணி செய்யும் நற் சிந்தனையாளரே மனிதருள் சிறந்தவர் என்பன போன்ற கோட்பாடுகள் இந்துக்களைப் பெரிதும் ஈர்த்தன. ஏகத்துவ அடிப்படையில் பக்தி இயக்கங்கள் ஆங்காங்கே உருவாயின. சங்கரர், இராமானுஜர், பஸ்வர், இராமானந்தர், வல்லபாச்சாரியார், சைதன்யர், கபீர்தாஸ் போன்றவர்கள் பக்தி இயக்கங்களைத் தோற்றுவித்து ஜாதி வேற்றுமைகளைக் களைய முற்பட்டனர். தமிழ்நாட்டில் சித்தர்களும் சூஃபிகளும் தோன்றி ஏகத்துவ இறைக் கோட்பாட்டை நிலை நிறுத்தவும் சாதி சமய வேறுபாடுகளைக் களைந்து, ஆன்மநேய ஒருமைப்பாட்டை நிலைநாட்டவும் உழைக்கலாயினர். இதன் விளைவாக இந்திய நாட்டின் மதச் சார்பற்ற தன்மை உருவாக வழிபிறந்தது.