பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143


இந்திய சமயப் பிரிவுகளும்
இஸ்லாமியச் செல்வாக்கும்

இந்திய நாட்டிற்குள் கால்பதித்த இஸ்லாம் இந்தியச் சமயங்களைச் செம்மைப்படுத்த எல்லா வகையிலும் உதவியுள்ளது என்பதை டாக்டர் தாரா சந்த் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் நூல்களில் விரிவாகவும் தெளிவாகவும் ஆய்ந்து கூறியுள்ளார்கள். டாக்டர் தாரா சந்த் அவர்களின் “இந்தியப் பண்பாட்டில் இஸ்லாத்தின் செல்வாக்கு” என்ற நூல் இதற்கான பல ஆதாரங்களை அடுக்கடுக்காகக் கூறி விவாதிக்கிறது.

தென்னகத்தில் அரபு வணிகர்கள் வாயிலாகப் பரப்பப்பட்ட இஸ்லாமிய நெறி, கொள்கை, கோட்பாடு, தத்துவங்கள் புதிய வடிவிலும் கோணத்திலும் பல்வேறு சமயப் பிரிவுகள் உருவாகத் தூண்டுகோலாயமைந்தது என்பது சரித்திர, சமய ஆய்வாளர்களின் கருத்தாகும். இதைப் பற்றி “இந்தியாவின் சமயங்கள்” என்ற தமது நூலில் பர்த் (BARTH) என்பவர் கீழ்க்கண்டவாறு விவரித்துள்ளார்:

“ஆஃப்கானியர்கள், துருக்கியர்கள், மங்கோலியர்கள் அவர்களுடைய மதத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் இந்த நாட்டைக் கைப்பற்றுபவர்களாக வருவதற்கு வெகு காலத்திற்கு முன்னாலேயே கலீஃபாக்களுடைய காலத்து அராபியர்கள் இந்தியக் கடற்கரைப் பிரதேசங்களில் வணிகர்களாக வந்து, இந்த நாட்டு மக்களோடு வியாபாரத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு விட்டார்கள். 9-வது நூற்றாண்டிலிருந்து 12-வது நூற்றாண்டு வரையில் இந்தப் பிரதேசத்தில் தான் சங்கரர், ராமானுஜர், ஆனந்த் தீர்த்தர் (மத்வர்), பஸ்வர் ஆகியவர்களுடைய பெயர்களோடு இணைக்கப்பட்டிருக்கின்ற சமய இயக்கங்கள் தோன்றின. அவற்றிலிருந்துதான் சரித்திரபூர்வமாக இந்தியாவில் காணப்படும் சமயப்