பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

பிரிவுகள் பிறந்தன. வெகுகாலத்துக்குப் பின்னால் வரையில் இதற்குச் சமமாக ஹிந்துஸ்தானத்தில் வேறு எதுவும் காணப்படவில்லை.”

மேலும், ‘தத்துவ, பக்தி இயக்கங்களுக்கு இஸ்லாமிய அடிப்படையும் செல்வாக்கும் உண்டா?’ என்ற கேள்விக்கு விடை தரும் வகையில் மேலும் விவரிக்கிறார்.

‘தென்னிந்தியாவில் தோன்றிய தத்துவ பக்தி இயக்கங்கள் ஆகியவற்றில் காணப்படும் தன்மை ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்தால் அவை ஆதிகாலத்தில் சமயக் கோட்பாடுகளிலிருந்து பிறந்தவை தாம் என்று சொல்ல முடியும். ஆனால், அந்தத் தன்மைகள் அனைத்தையும் மொத்தமாகப் பார்க்கும்போதும், அவைகளுடைய குறிப்பிட்ட அழுத்தத்தை நோக்கும் போதும் யாரும் காணத் தவறாத அளவுக்கு அவை இஸ்லாமியக் கோட்பாடுகளை ஒத்திருக்கின்றன. ஆகையினால் இஸ்லாத்தினுடைய செல்வாக்கினாலேயே அவை அப்படி தோன்றின என்ற வாதத்தை ஒத்துக் கொள்ளக்கூடியதாக ஆக்குகின்றன. முன்னர் விவரிக்கப்பட்ட சமய இயக்கங்கள் அனைத்திலும் இந்த முடிவுக்கான சாட்சியம் நேரடியாகக் கடன் வாங்கியதாகச் சொல்ல முடியாமலும் சூழ்நிலையையும் சந்தர்ப்பத்தையும் கொண்டு முடிவு செய்யக்கூடியதாகவுமே இருக்கிறது. என்றாலும், அல்புரூனி எழுதியது போல ‘ஹிந்துக்கள் மட்டுமீறிய தன்மதிப்புடைய வர்க்கமாவார்கள். அவர்கள் பிற கருத்துகளை தங்களுடையதாக ஆக்கிக் கொள்வதில் தலைசிறந்த கலைஞர்களாக இருந்தார்கள். வெகு சுலபமாகக் கண்டுபிடித்துவிடக் கூடிய, கலை நயமற்ற ‘காப்பி’ யடித்தலின் மூலம் தங்களுடைய கெளரவம் குறைந்து போவதற்கு அவர்கள் இடங்கொடுக்கவில்லை. இந்தியாவினுடைய கலாச்சாரத்தின் பழங்காலச் சரித்திரம் முழுவதும் இக்கூற்றுகளின் உண்மைக்குச் சான்று பகர்வதாகவே இருக்கிறது.” (பக்-107.108)