பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

பணியைத் தமிழ் ஞானப்பாடல் மூலமாகத் திறம்பட பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

ஞான இலக்கிய சமய சமரசம்

மெய்யறிவாளன் தன்னை ஆராய்வதன்மூலம் இறைவனைப் பற்றியும் ஆராய்கிறான். இப்போக்கே சித்தர்களிடமும் இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகளாகிய சூஃபிகளிடமும் மிகுந்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சித்தர்களுக்கும் சூஃபிகளாகிய இஸ்லாமிய மெய்ஞ்ஞானக் கவிஞர்களுக்குமிடையே எத்தகைய வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. சித்தர்கள் ஆடம்பர ஆராவாரப் போக்குகளை வெறுத்தார்கள். சாதி, மத, சம்பிரதாயங்களைக் கடந்த நிலையில் அனைவரையும் ஒருசேர நேசித்தார்கள். மனித நல் வாழ்வுக்காக அல்லும் பகலும் உழைத்தார்கள். இதே போக்கை முழுமையாகக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள் இஸ்லாமிய சூஃபிகள். இதனாலேயே பதினெண் சித்தர்கள் பட்டியலில் மச்சரேகை சித்தர் எனப்படும் ஜதுரூஸ், குணங்குடி மஸ்தான் என அவழக்கப்படும் சுல்தான் அப்துல் காதிர், தக்கலை மெய்ஞ்ஞானி பீர் முஹம்மது அப்பா ஆகிய மூன்று முஸ்லிம் சூஃபிகள் இடம் பெற்றுள்ளார்கள். இதுவே இவர்களுக்கிடையே எண்ணத்திலும் சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் போக்குகளிலும் ஒரே விதத் தன்மை இருந்ததற்குச் சான்றாகும்.

கருத்தொற்றுமை மட்டுமல்ல
சொல் ஒற்றுமையும் உண்டு

தாயுமானவரும் குணங்குடி மஸ்தானும் வெவ்வேறு சமயச் சார்புடையவர்களாயினும் அவர்தம் சிந்தனையும்