பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

போன்ற சொற்களைத் தாராளமாகக் கையாண்டு தன் ஞானப் பாக்களை இயற்றியுள்ளார். இச்சொற்கள் ஹிந்துக் கடவுள்களின் பெயராகவும் ஹிந்துத் தத்துவ நுட்பங்களைப் புலப்படுத்தும் சொற்களாகவும் அமைந்துள்ளதே, இவற்றை இஸ்லாமிய நெறிபேணும் முஸ்லிமாகிய தான் பயன்படுத்துவதா என அவர் எண்ணவில்லை.

தத்துவவியல் சார்ந்த ஞானத் துறையின் ‘பரிபாஷை’ சொற்களான இவை தத்துவக் கலைச் சொற்களாகும். இவை ஞானத் துறையில் தனிப்பொருள் கொண்ட சொற்களாகும்.

நந்தி-குரு: விட்டுணு - வாங்கிய மூச்சை உள் நிறுத்தும் கும்பகம்; உருத்திரன் - வெளியிடும் மூச்சாகிய இரேசகம்; சிவன், சக்தி-வெளியே வாயு சிவம்; உள்ளே புகும் வாயு சக்தி; சிவம் உயிர், சக்தி உடல்; அம்பலம்-புருவ நடு; தட்சிணா மூர்த்தி-குரு எனத் தத்துவத் துறையில் தனிப் பொருள் தந்தபோதிலும் தாங்கள் புலப்படுத்த விழையும் ஞானக் கருத்துகள் சமயங்கடந்தவை என்பதை உணர்த்தவே குணங்குடி மஸ்தான் போன்ற இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் செல்வர்களாகிய சூஃபிகள், ஹிந்துக்கள் சமய அடிப்படையில் பயன்படுத்தும் சொற்களைத் தாராளமாகக் கையாண்டு தங்கள் சிந்தனைகளையும் மார்க்க உணர்வுகளை-ஞானக் கருத்துகளை சமய சமரச எண்ணத்திற்கு வண்ணமூட்டும் வகையிலும் சமய நல்லிணக்க உணர்வுக்கு வலுவூட்டும் வகையிலும் செயல்பட்டுள்ளனர் என்பது எண்ணி இன்புறத்தக்கதாகும். குணங்குடியார் போன்ற மெய்ஞ்ஞானிகளின் பொதுமை உள்ளம் வழிகாட்டும் ஒளி விளக்காகும்.

இஸ்லாமிய சூஃபிகளும்
ஹிந்து சமயச் சீடர்களும்

சித்தர்களைப் போன்றே இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகளாகிய சூஃபிகளின் சீடர்களாக அமைந்தவர்களில்