பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

பெரும்பான்மையினர் ஹிந்து சமயத்தையும் பிற சமயங்களையும் சேர்ந்தவர்களே ஆவர்.

குணங்குடி மஸ்தான், தக்கலை பீர் முஹம்மது அப்பா, பெண்பாற் சூஃபிகளில் தென்காசி ரசூல் பீவி, இளையான் குடி கச்சிப்பிள்ளையம்மாள் போன்றோர் பெற்றிருந்த சீடர்களில் ஒரு சிலர் தவிர மற்றவர்களெல்லாம் பிற சமயத்தவர்களே ஆவர். காரணம், சூஃபிகளின் சிந்தனைகளும் கருத்துகளும் இஸ்லாத்தின் அடிப்படையில் சமயங் கடந்த கண்ணோட்டத்தோடு இருந்ததேயாகும்.

சூஃபியிசத்தின் அடித்தளப் பண்புகளாக அமைந்திருப்பவை மூன்று என்பார் இந்தியச் சூஃபி ஞானி காஜா நஸ்ருத்தீன் என்பார். அவையாவன 1.காய சுத்தி (தஸ்கிய நப்ஸ்) 2. இதய சுத்தி (திஸ்பியா கல்பு), 3 ஆத்ம சுத்தி (தஜ்லியா ரூஹ்) என்ற இம்மூன்று கோட்பாடுகளும் சமயங் கடந்த தன்மை கொண்டவை என்பதில் ஐயமில்லை. இறைநாட்டமும் கடைத்தேற்ற ஆர்வமும் கொண்ட அனைவருக்கும் பொதுவானவை. எனவே, சித்தர்கள், சூஃபிகள் போன்றவர்கள் சமய சமரசத்தைத் தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்டதோடு மக்களும் அவற்றைக் கைக்கொண்டு பேணி பெரு நிலைபெற வழிகாட்டி உழைத்தனர்.

மதபேதம் ஓதி மதிகெட்டவர்க்கு
எட்டாத வான் கருணை வெள்ளம்

குணங்குடி மஸ்தான் போன்ற இஸ்லாமிய மெய்ஞ்ஞானக் கவிஞர்கள் சாதி, சமய வேறுபாடுகட்கு அப்பாற் பட்ட நிலையில், ஏக இறையுணர்வோடு, மனித குலம் முழுமைக்குமான ‘இலங்கு மெய்ஞ்ஞான’ உணர்வுகளை ஊட்டி, ஒவ்வொருவரையும் இறை நெறி வழி வாழும் மனிதப் புனிதர்களாக மாற்றும் அருந்தொண்டை ஆற்றிய