பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157


அவர் கூறும் குணங்குடி என்பது ஊரல்ல; அனைத்து நல்லுணர்வுகளுக்கும் நற்குணங்களுக்கும் மூலமான, அவை குடியிருக்கும் மூலப் பொருளான பரம் பொருளையே. இறைவனையே குறிக்கிறது.

இறைவனின் பேரருட் திறம் அணுவிலும் அண்ட கோடிகளிலும் இரகசியமாய் விளங்குவதன் காரணத்தை அறிய விழையாமல் உன் தெய்வம், என் தெய்வம் எனப் பிதற்றித் திரிவதைக் கண்டு,

“அண்ட கோடிகளையும் தன்னுள் வைத் தணுவினுக்
கணுவான காரணத்தை அறியாமல்
என்தெய்வம் உன்தெய்வம் என்பார்க்கு
அவ்வகைக் காரணத்தை
எண்டிசை விளைக்கின்ற வித்தாயிருந்துமோ
நிடமற்ற காரணத்தை
எய்திக் களிக்கவடி யேனுமுமை நம்பினேன்
எதிர் காட்டி ஆளுதற்கே”

எனத் தன் குரு பிரானாகிய ஹஜ்ரத் முஹையித்தீனை நோக்கிப் பாடுகின்றார்.

இதைப் போலவே விஷ்ணு சுவாமி, மத்வாச்சாரியார், நிம்பார்க்கர் (பாஸ்கராச்சாரியார்) போன்ற ஹிந்து சமயாச் சாரியர்களின்-போதனைகளின் செழுமைக்கும் இஸ்லாமியத் தத்துவச் சிந்தனைகள் உரமாயமைந்துள்ளன என்பதைத் தத்துவ ஆய்வுலகம் நன்கறிந்துள்ளது.

இவ்வாறு ஹிந்து சமய நெறியினுடைய செழிப்பான வளர்ச்சிக்கும் வளமூட்டும் மாறுதல்களுக்கும் இஸ்லாமிய நெறியும் அதன் கட்டுக்கோப்பான நடைமுறைகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருங் காரணமாயமைந்துள்ளதை, அமைந்து வருவதை மறுக்கவோ மறைக்கவோ