பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

முடியாது. இத்தகு பங்களிப்பு மூலம் முஸ்லிம்களும் பிற சமய மக்களும் இதயத்தால் நெருங்கி வர இயல்கின்றது. அவர்களிடையே உருவாகும் இணைப்பும் பிணைப்பும் மேலும் வளர, வலுப்பட இன்னும் அதிக அளவில் சமயத்தவர்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். இது காலக் கட்டாயமும் கூட.

பிற மத உணர்வுகளுக்குப் பாதுகாப்பு

ஒவ்வொருவரும் தத்தமது சமயக் கோட்பாட்டைப் பின்பற்றுவதற்கும் தங்கள் மனச்சாட்சிப்படி நடப்பதற்கும் இஸ்லாம் முழு உரிமை வழங்குகிறது. அது மட்டுமல்ல மற்றுமொரு தனிமனித உரிமையையும் உறுதி செய்கிறது. அதுதான் ஒரு சமயத்தவரின் மத நம்பிக்கையை, சமயச் சடங்கை மற்ற சமயத்தவர்கள் மதித்து நடக்க வேண்டும் என்பதே அது. இந்த உணர்வுக்குப் புறம்பாக நம்பிக்கை, செயல்பாடுகளுக்கு மாறுபாடாக நடப்பதை இஸ்லாம் அறவே ஏற்கவில்லை. இதைத் திருக்குர்ஆன் திருமறை,

“(நம்பிக்கையாளர்களே) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (ஆண்டவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் பழிக்காதீர்கள்.” (6:108)

இவ்வாறு பணிப்பது சிலைகளையும் கடவுளர் உருவங்களையும் வணங்குவதை மட்டுமன்று, தாங்கள் பெரிதும் மதித்துப் போற்றும் தலைவர்களின் உருவங்களை சிலை வடிவிலும் படவடிவிலும் வணங்கிப் போற்றுவதற்கும் பொருந்தும். ஒரு முஸ்லிமின் மார்க்க அடிப்படையில் இத்தகைய உருவ வணக்கமுறை தவறானதாக இருந்த போதிலும், பிற சமயத்தவர்களின் கண்ணோட்டத்தில் இச்செயல் மதிப்பும் மரியாதையும் உடைய செயலாகக் கருதப்படலாம். இதனால், இச்செயலை இழித்து பழித்து பேசுவதால் அச்சமயத்தவர்களின் அல்லது போக்குடைய