பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163


"கஜினி முகம்மதுவின் சேனைத் தளபதியாக இருந்தவர் ஒரு ஹிந்து. அவர் பெயர் திலக். மத்திய ஆசியாவில் உள்ள துருக்கிஸ்தானில் கஜினி முகம்மது ஆட்சியில் புரட்சி ஏற்பட்டது. அதை அடக்க கஜினி முகம்மது, திலக்கைத் தான் அனுப்பினார். துருக்கிஸ்தான் நூற்றுக்கு நூறு சதவிகிதம் முஸ்லிம்களைக் கொண்ட பிரதேசம். அங்கே நடந்த புரட்சியை அடக்குவதற்கு கஜினியின் தளபதி திலக் செய்த அட்டுழியங்களுக்கும் அதிமதிகளுக்கும் அளவே இல்லை. அந்த நிகழ்ச்சிக்கு ஒப்பாக வரலாற்றில் மற்றொரு கொடிய நிகழ்ச்சியை எடுத்துக் கூறமுடியாது. அத்தகைய அராஜகம் நடந்தது. இதையெல்லாம் மதப்போர் என்பதா? கஜினி முகம்மதுவின் தளபதி திலக் முஸ்லிம் பிரதேசத்தில் செய்த அட்டுழியத்தை என்னவென்று கூறுவது?” (வரலாற்றறிஞர் பி என்.பாண்டே 13-1-1996 ‘தி டைம்ஸ் ஆஃப் இண்டியா’ பேட்டியில்)

மன்னர் செயல்களுக்கு மதச் சாயம்

வரலாறு நெடுகிலும் ஒரு உண்மை பளிச்சிடுகிறது. மன்னர்களின் போர் நடவடிக்கைகளுக்கு மதச் சாயம் பூசும் செயலே அது. தங்கள் தவறான ஆதிக்க நோக்குக்குப் பாதுகாப்புத் தேடும் முயற்சி இது. சிலசமயம் ‘ராஜதந்திரப் போக்கு’ என மகுடம் பெறுவதுமுண்டு. இதைப் பற்றி வரலாற்றறிஞர் பி.என்.பாண்டே கூறுவதைக் கேட்போம்.

“இஸ்லாத்தின் பெயரைக் கூறி முஸ்லிம் மன்னர்கள் போர்களை நடத்தியுள்ளனர். அதேபோல மற்ற மதங்களைச் சேர்ந்த மன்னர்களும் தத்தமது மதங்களின் பேரால் பல போர்களை நிகழ்த்தியுள்ளனர். இத்தகைய போர்களுக்கும் மதங்களுக்கும் சம்பந்தமில்லை. மன்னர்கள் தங்களின்