பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169

‘இபுனியன் படைப்போர்', ‘வடோச்சிப் படைப்போர்’, ‘உச்சிப் படைப்போர் என அழைக்கப்படுவது எண்ணத்தக்கதாகும்.

இரண்டாவது பொருளான ‘தீயன செய்யத் தூண்டும் உள்ளத்து விலங்குணர்வை எதிர்த்துப் போரிடுதல்’ என்பதையே திருக்குர்ஆன் திருமறையும் பெருமானாரின் வாழ்வும் வாக்குமான ஹதீஸ்களும் அதிகமதிகம் வலியுறுத்துகின்றன. இதற்கான பயிற்சிக்களமாக உருவானதே இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் துறையான ‘சூஃபியிஸம்’. தன் மன இச்சைகளுக்கு அடிமையாகாமல் அதனை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதுதான் ‘ஜிஹாது’.

தவறான செயல்களைச் செய்வோரைத் திருத்தி அவர்களை நேரான செயல்களின்பால் திருப்புகின்ற செயலும் ‘ஜிஹாது தான்.

தான் முயன்று தேடிய செல்வத்தை இறைவழியில் செலவு செய்வதும் ‘ஜிஹாது’ ஆகும்.

எனவே, ‘ஜிஹாது’ என்ற சொல்லை ‘முஸ்லிமல்லாதவர்கள் மீது நடத்தும் புனிதப் போர்’ எனத் தவறான பொருள் விளக்கம் தந்து இஸ்லாமிய நெறி மீது மாசு கற்பிக்க முயல்வது முற்றிலும் தவறான போக்காகும். இதை உண்மைக்குப் புறம்பான ஒருவகை விஷமப் பிரச்சாரம் என்றே கூறலாம்.

பிற சமயத்தவர்மீது ‘ஜிஸ்யா’ வரி ஏன்?

‘ஜிஹாது’ போன்றே இஸ்லாமியரல்லாதவர்களால் மிகத் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு அல்லது தவறான முறையில் பொருள்தரும் வகையில் விளக்கப்பட்டு வரும் இஸ்லாமியச் சட்டச் சொல் ‘ஜிஸ்யா’ என்பதாகும்.

முஸ்லிம்களிடம் எவ்வித வரியும் வாங்காத நிலையில் ‘முஸ்லிம் அல்லாதவர்’ என்ற ஒரே காரணத்துக்காகத்