பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171

செலவிடப்படுமேயன்றி அரசு நிர்வாகக் காரியங்களுக்கோ அறவே செலவிடப்படுவதில்லை. சுருங்கச் சொன்னால் முஸ்லிம் அல்லாதவர்களின் ஒட்டுமொத்தச் சமுதாய நலனுக்கும் பாதுகாப்புக்குமென வசூலிக்கப்பட்ட தொகையே ‘ஜிஸ்யா’. இந்த ஜிஸ்யா வரியின் பெரும் பகுதி ஹிந்துக் கோயில்களின் பராமரிப்புக்கும் புனருத்தாரணத்துக் கும் பயன்படுத்தப்ப்ட்டு வந்ததாகப் பல வரலாற்றுக் குறிப்புகள் காணக் கிடக்கின்றன.

அதுமட்டுமல்ல, முஸ்லிம்களிடமிருந்து இரண்டரை சதவீதம் ‘ஜக்காத்’ எனும் ஏழை வரியை அரசு கட்டாயமாக வசூலித்து வந்தது. ஒவ்வொரு முஸ்லிமும் நிறைவேற்ற வேண்டிய ஐம்பெரும் கட்டாயக் கடமைகளில் இஃதொன்றாகும். நாட்டு மக்களில் ஜக்காத்துக்குரியவர்கள் அனைவருக்கும் சமநிலையில் இத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். நாட்டு மக்களில் முஸ்லிம்களிடமிருந்து மட்டுமே ‘ஜக்காத்’ தொகை வசூலிக்க முடியும். பிற சமயத்தவர்களாகிய பிற குடிமக்களிடமிருந்து ‘ஜக்காத்’ தொகை வசூலிக்க முடியாதாகையால், அதற்குப் பகரமாக ஜக்காத் அளவுக்கு 2 1/2 சதவிதம் இல்லாவிடினும் ஒரு சிறுதொகையை தான் வரியாக முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து அரசு வசூலித்தது. ஜக்காத் தொகையைவிட ‘ஜிஸ்யா’ தொகை மிகச் சிறியதாகும். ‘ஜக்காத்’, ‘ஜிஸ்யா’ இரு தொகைகளும் சமுதாய மக்களின் நலப்பணிகளுக்கு மட்டுமே செலவிடப்பட்டன. மிகக் குறைவான ‘ஜிஸ்யா’ தொகையை அரசுக்குத் தந்து நிறைய பயன்களை அரசிடமிருந்து திரும்பப் பெறும் வாய்ப்பு இதனால் முஸ்லிம் அல்லாதாருக்கு வாய்த்தது. இதைத் தெளிவாக நன்குணர்ந்த பிற சமய மக்கள் மிகுந்த விருப்போடு மனமுவந்து ‘ஜிஸ்யா’ சிறு வரியை அரசுக்கு அளித்து வந்தனர் என்பது வரலாற்று உண்மை.