பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தாலும் அண்டை அயலார் என்ற முறையில் அவர்களின் உணர்ச்சிகளோ நம்பிக்கைகளோ ஊறுபட்டுவிடாமல், உள்ளம் புண்பட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்திக் கூறுகிறது.

அதுமட்டுமல்ல, நம் அண்டை அயலாருக்கு ஏதேனும் தீங்கு, வெளியிலிருந்து மற்றவர்களால் ஏற்படுகிறது என்றால் இனம், உறவு, மதம் எதுவும் பார்க்காமல் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் முழுப் பொறுப்பு அண்டை வீட்டுக்காரர் என்ற முறையில் ஒரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமையாகிறது.

“எவருடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாது காப்புப் பெற முடியவில்லையோ, அவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்” என்பது நபிகள் நாயகம் (சல்) அவர்களின் அமுத மொழியாகும்.

இவ்வாறு யாராக இருந்தாலும் எவ்வகையான வாழ்க்கை நெறியை, சமயக் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் அவர்களை சமுதாயத்தின் இன்றியமையா அங்கமாகக் கருதி, அவர்கள் உணர்வுகளையும் சமய நெறிகளையும் கொள்கைக் கோட்பாடுகளையும் வெறுத்தொதுக்காது, உதாசீனப்படுத்தாது, அவர்கள் அளவில் மதிக்கும் உன்னதமான சகிப்புணர்வு வெளிப்பாட்டின்மூலம் சமுதாய ஒருங்கிணைவை உருவாக்க இஸ்லாம் வழிகாட்டுகிறது.

அண்டை வீட்டாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண் டும் என்பதற்கு அண்ணலாரின் வாழ்வும் வாக்கும் வழிகாட்டியாயமைந்துள்ளன.