பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

யில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் அதை இரு தனிப்பட்ட மனிதர்களிடையே ஏற்பட்ட தகராறாக மட்டுமே கருதி செயல்பட வேண்டுமேயல்லாது, இரு மதத்தவர்களுக்கு மிடையேயான மதச்சண்டையாகக் கருதும் போக்கு அறவே ஒழிய வேண்டும்” என்ற அறிவுரை மிகவும் வரவேற்கத்தக்கது.

ஆசிரியர் மணவை முஸ்தபா அவர்கள் சிறந்த தமிழறிஞர்; தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், தமிழ்க் கூரியரின் ஆசிரியராக 1967-லிருந்து பணியாற்றிக் கொண்டு, எழுதியும் மொழிபெயர்த்தும் வெளியிட்டநூல்கள் 36. அஃதோடு தென் மொழிகள் புத்தகப் பொறுப்புக் கழகத்தின் (Southern Languages Book Trust) சார்பில் 120 புத்தகங்களின் பதிப்பாசிரியராவார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ ‘திரு.வி.க விருது’, ‘தமிழ்த்தூதுவர்’, ‘வளர் தமிழ்ச் செல்வர் பட்டம்’, ‘அறிவியல் தமிழ்ச் சிற்பி’ ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

இறுதியாக இந்த, ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ என்ற நூலை வெளியிட்டதன் மூலம் தமிழுக்கும், இஸ்லாத்திற்கும் அரிய சேவை செய்துள்ளார். இந்த நூலை ஒவ்வொரு தமிழ் முஸ்லிமும் கட்டாயம் வாங்கிப் படிப்பதோடு, தனது மற்றைய தமிழ்ச் சகோதரனுக்கும் வாங்கி வழங்க வேண்டும்.

20-4-1996
சென்னை-104

சி.மு.அப்துல் வகாப், எம்.ஏ. பி.எல்;
நீதிபதி
சென்னை உயர்நீதி மன்றம்