பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182


இதற்கு இஸ்லாமியத் திருமறையாகிய திருக்குர் ஆன் எல்லோரும் ஒருமுகமாக ஏற்றுப் போற்றத்தக்க வழிமுறையை அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறது?

புதிதாக இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம் ஆனவர் பிற மதத்தைச் சார்ந்துள்ள தன் பெற்றோர், உற்றார் உறவினரிடம் எவ்விதப் பாகுபாடும் வேற்றுமை உணர்வும் அறவே காட்டக் கூடாது. எப்போதும்போல் அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் பணிக்கிறது.

“உன் பெற்றோர் இறைவனுக்கு இணை வைத்து வணங்குவதை வலியுறுத்தினால் அதை நீ ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதே என்றாலும் உன் பெற்றோரிடம் நீ என்றும்போல் இனிமையுடன் ஒன்றிணைந்து நடந்து கொள்வாயாக.”

எனக் கூறுவதன்மூலம் முஸ்லிம் ஆன ஒருவன் முஸ்லிம் ஆகாத பிற சமயம் பேணும் தன் பெற்றோரிடம் எவ்வாறு சிறப்பான முறையில் நடந்து கொள்ள வழி காட்டுகிறதோ அதே முறையில் முஸ்லிம் அல்லாத உற்றார் உறவினர்களிடமும் அன்போடு இதமாக நடந்து கொள்ள வேண்டும் எனப் பணிக்கிறது. தான் இணைந்ததுபோல் தன் பெற்றோரோ மற்ற இனப் பந்துக்களோ இணையவில்லையே எனக் கருதி அவர்களிடம் தார தம்மியமோ பாகுபாடோ காட்டி நடப்பதைக் கடும் குற்றமாக இஸ்லாம் கருதுகிறது.

பிற மத உணர்வை ஊனப்படுத்த
உரிமை இல்லை

பிற சமயச் சார்புள்ளவர்கள் குடும்பத்தவர்களாக இருந்தாலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அல்லது மாற்றாராயினும் அவர்களது சமய உணர்வை வெளிப்படுத்த அவர்கட்கு முழு உரிமை உண்டு. அவர்களது உணர்வும்