பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195


சமய நல்லிணக்கத்துக்கான பல படிப்பினைகளை ஹுதைபியா ஒப்பந்தம் உலகுக்குணர்த்திக் கொண்டுள்ளது.

அதுவரை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத பிற சமயத்தவர்களும் கீரியும் பாம்புமாக இருந்த நிலையை மாற்றி, ஒரிடத்தில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர் களும் கூடியமர்ந்து பேச பெரும் வாய்ப்பேற்படுத்தித் தந்தது. ஒருவர் உணர்வை மற்றவர் அறியவும் அதை மதிக்கவுமான மன நிலை உருவாகியது. அதுவரை ஒருவரையொருவர் சந்திக்க அறவே விரும்பாத நிலை மாறி, இரு சாராரும் மனம் விட்டுப் பேசவும் தங்கள் சமயக் கருத்துகளைப் பறிமாறிக் கொள்ளவும் வாய்ப்பளித்தது. அமைதிக் காலமான அவ்வோராண்டு காலம் முழுவதும் தங்குதடையின்றி மார்க்கப் பிரச்சாரம் நடைபெறவும் முஸ்லிம்களின் நல்லொழுக்கப் பண்பாடுகளின்பால் ஈர்க்கப்பட்ட பிற சமயத்தினர் இஸ்லாத்தின்பால் வந்து இணையவும் வாய்ப்பாயமைந்தது.

ஹுதைபியா உடன்படிக்கை சமய நல்லிணக்கத்துக் காகவும் சமரச உணர்வையூட்டவும் சாந்தியையும் சமா தானத்தையும் நிலைநாட்டவும் எந்த அளவு வேறுபட்ட சமயத்தவர்கள் ஒத்திணங்கிப் போக வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஹுதைபியா ஒப்பந்தம் அமைந்துள்ளதெனலாம். சண்டையில் முடியாததை சமாதானத்தில் சாதிக்கவியலும் என்பதற்குப் பெருமானாரின் செயற்பாடுகள் வழிகாட்டும் ஒளி விளக்காகும்.

ஹுதைபியா ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மற்றொரு நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்கா குறைஷிகளின் சார்பில் தூதுவராகப் பெருமானாரிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தியவர் சுகைல் என்பவராவார். அவர் சிலை வணக்க மதத்திலேயே மிகவும்